Back to Top

விளக்கமறியலில்  இருந்த மூவர் உயர் தர பரீட்சை எழுத அனுமதி

விளக்கமறியலில் இருந்த மூவர் உயர் தர பரீட்சை எழுத அனுமதி

August 8, 2018  09:53 am

Bookmark and Share
வாள்வெட்டு வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதாகி விளக்கமறியலில் இருந்த மூவர் இன்று (08) உயர் தரப் பரீட்சைக்கு தோற்றுவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

தென்மராட்சிப் பிரதேசத்தில் அண்மைக்காலமாக வன்முறைக் கும்பலின் அடாவடிகள் அதிகரித்திருந்தன.

இந்நிலையில் கடந்த 4 ஆம் திகதி மானிப்பாய் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது சாவகச்சேரி, சரசாலை, மறவன்புலோ பகுதியைச் சேர்ந்த 10 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்த 4 வாள்கள், செயின்கள் உள்பட கூரிய ஆயுதங்களும் மீட்கப்பட்டதாக யாழ். சிறைச்சாலை அத்தியட்சகர் நேமல் விஐயசிங்க தெரிவித்தார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள் 18 வயது முதல் 20 வயதுக்குட்பட்டவர்கள். இதில் இவ்வருடம் 3 பேர் உயர் தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பிட்ட சந்தேசக நபர்கள் 10 பேரும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 3 சந்தேக நபர்கள் யாழ். சிறைச்சாலை அத்தியட்சகரின் கண்காணிப்பின் கீழ் உயர் தரப் பரீட்சை எழுதுவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியதை அடுத்து மூவரும் இன்று பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.

(யாழ். நிருபர் ரமணன்)