Back to Top

தடை செய்யப்பட்ட மீன்பிடி முறையை நிறுத்துமாறு ஆர்ப்பாட்டம்

தடை செய்யப்பட்ட மீன்பிடி முறையை நிறுத்துமாறு ஆர்ப்பாட்டம்

August 8, 2018  02:19 pm

Bookmark and Share
திருகோணமலை மாவட்டத்தில் தொடரும் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளை முற்றாக இல்லாமல் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மூவினத்தையும் சேர்ந்த மீனவர்களும் ஒன்றிணைந்து இன்று (08) காலை திருகோணமலை மணிக்கூட்டுச் சந்தியில் பாதையைமரித்து ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.

டைனமைட் பாவனை, சுருக்குவலை பாவனை, தடைசெய்யப்பட்ட பிரதேசங்களில் மீன்பிடித்தல் போன்றவற்றால் தாம் பிரச்சினைகளுக்கு முகம்கொடுப்பதாகவும், இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இச் செயற்பாடுகளால் மீனினமும் பெரும் அழிவைச் சந்திப்பதாகவும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

(திருகோணமலை நிருபர் கீத்)