Back to Top

கொமர்ஷல் வங்கி அறிமுகம் செய்துள்ள NFC வசதி கொண்ட Chip& PIN கிரடிட் கார்ட்

கொமர்ஷல் வங்கி அறிமுகம் செய்துள்ள NFC வசதி கொண்ட Chip& PIN கிரடிட் கார்ட்

August 8, 2018  03:05 pm

Bookmark and Share
கொமர்ஷல் வங்கி மாஸ்டர்கார்ட்டுன் இணைந்து NFC வசதி கொண்ட Chip & PIN கிரடிட் கார்ட்களை அறிமுகம் செய்துள்ளது. இந்தப் புதிய NFC வசதி கொண்ட Chip & PIN கிரடிட் கார்ட் பாவனை மற்றும் பிரயோகம் என்பனவற்றின் போது இடம்பெறுகின்ற மோசடிகளுக்கு எதிராக உச்சக் கட்ட பாதுகாப்பை வழங்குகின்றது. அத்தோடு விற்பனைப் புள்ளி (POS) இல் தனிப்பட்ட இலக்கத்தின் காரணமாக (PIN) இடம்பெறக் கூடிய மோசடிகளையும் இது தடுக்கின்றது என வங்கி அறிவித்துள்ளது.

இந்தக் கார்ட் இணையவழி மற்றும் இணைவழியற்ற PIN தொழில் நுட்பத்தைக் கொண்டுள்ளது. இணையவழி PIN தரவுகள் வங்கியின் அங்கீகாரத்துக்காக சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் சரிபார்க்கப்படுகின்றது. இணைய வழியற்ற PIN விற்பனைப் புள்ளி POS நிலையத்தில் வைத்துசரிபார்க்கப்படுகின்றது. இந்தக் கார்ட்டுகளை உள்ளுரிலும் சர்வதேச மட்டத்திலும் ATM மூலம் பணத்தை மீளப் பெறவும் பயன்படுத்தலாம். PIN ஐ செலுத்துவதன் மூலம் ஏனைய கிரடிட் கார்ட்களைப் போன்றே இதுவும் செயற்படும்.

இந்தப் புதிய தொழில்நுட்பம் மாஸ்டர்கார்ட் கிரடிட் கார்ட்டுகளுக்கு உறுதியை அளிக்கின்றது. கார்ட் உரிமையாளர்கள் தமக்குரிய Pin இலக்கங்களை பதிவு செய்யப்பட்ட தொலைபேசிகளுக்கான SMS மூலம் அல்லது PIN mailer மூலம் பெற்றுக் கொள்ளலாம். POS இயந்திரங்களில் தமது PIN இலக்கத்தை இட்டு வாடிக்கையாளர்கள் தமது கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளலாம்.

Chip & PIN தொழில்நுட்பத்துடன் கூடிய டெபிட் கார்ட்டுகளை இலங்கையில் முதற் தடவையாக கொமர்ஷல் வங்கியே அறிமுகம் செய்தது. கிரடிட் கார்ட்டுகளும் தற்போது அதே தொழில்நுட்பத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இது விரிவான வாடிக்கையாளர் பிரிவுக்கு பாதுகாப்பை மேம்படுத்துகின்றது. இன்று இது மிகவும் அத்தியாவசியமான தேவையாக உள்ளது´ என்று கூறினார் கொமர்ஷல் வங்கியின் சந்தப்படுத்தல் பிரதி பொது முகாமையாளர் ஹஸ்ரத் முனசிங்க.

இந்த தொழில்நுட்பத்துடன் கூடிய கார்ட்டை பாவிக்கும் வாடிக்கையாளாகள் ஒவ்வொரு தடவையும் அதை பாவிக்கும் போது தமது தனிப்பட்ட இலக்கத்தை செலுத்தி அங்கீகாரத்தை வழங்க வேண்டி இருப்பதால் அல்லது, ஈ வர்த்தக கொடுக்கல் வாங்கல்களின் போது OTP இலக்கத்தைபயன்படுத்தவேண்டி இருப்பதால் மோசடிகள் முற்றாகத் தவிர்க்கப்படுகின்றன. நியுயோர்க்கில் தலைமையகத்தைக் கொண்டுள்ள மாஸ்டர்கார்ட் நிறுவனம் உலகின் முன்னணி கொடுப்பனவுகள் மற்றும் தொழில்நுட்பக் கம்பனியாகும். உலகம் முழுவதும் உள்ள நுகர்வோர், வர்த்தகர்கள், வியாபாரிகள், விநியோகஸ்தர்கள் மற்றும் அரசாங்கங்கள் என்பனவற்றை இது தொடர்புபடுத்துகின்றது. பணம் மற்றும் காசோலை என்பனவற்றுக்குப் பதிலாக இரத்திரனியல் முறையிலான பணப் பரிமாற்றத்தை இது ஊக்குவிக்கின்றது.

கொமர்ஷல் வங்கி அட்டைகள் தான் இலங்கையில் பாவனையில் மிக வேகமான வளர்ச்சி கண்டுவரும் அட்டைகளாகும். விற்பனைப் புள்ளி பாவனையில் வங்கியின் கிரடிட் மற்றும் டெபிட் கார்ட்டுகள் தான் சந்தையில் தலைமை நிலையிலும் உள்ளன. வெள்ளி தங்கம் பிளேட்டினம் என பல பிரிவுகளில் விஸா, மாஸ்டர்கார்ட், விஸா சிக்னேச்சர், வேர்ள்ட் மாஸ்டர் கார்ட் மற்றும் விஸா பிரீமியர் பிரிவில் விஸா இன்பினிட் கார்ட் என பல்வகை கார்ட்டுகளை வங்கி வழங்குகின்றது. இவை அனைத்தும் ´டெப் அன்ட் கோ ´NFC தொழில்நுட்பம் கொண்டவை. மிக உறுதியான NFC விற்பனைப் புள்ளி (POS) வலையமைப்பையும் இவை கொண்டுள்ளளன. மெக்ஸ் லோயல்டி வெகுமதித் திட்டம் தான் கிரடிட் மற்றும் டெபிட் கார்ட் ஆகிய இரண்டுக்கும் வெகுமதிகளை வழங்கும் ஒரே வாடிக்கையாளர் திட்டமாகும்.

தொடர்ந்து எட்டு வருடங்களாக உலகின் தலை சிறந்த ஆயிரம் வங்கிகள் வரிசையில் இடம் பெற்றுள்ள கொமர்ஷல் வங்கி நாடு முழுவதும் 261 கிளைகளுடனும், 775 ATM வலையமைப்புக்களுடனும் செயற்படுகின்றது. வங்கி 2016 மற்றும் 2017ம் ஆண்டு காலப்பகுதியில் 30க்கும் மேற்பட்ட உள்ளுர் மற்றும் சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. 2018ன் முதல் ஆறு மாத காலத்தில் மட்டும் 16 சர்வதேச விருதுகளையும் உள்ளுர் விருதுகளையும் சர்வதேச நிறுவனங்கள் மற்றும் வெளியீடுகளிடம் இருந்து கொமர்ஷல் வங்கி பெற்றுள்ளது.