Back to Top

15 ஆண்டு பங்குடமையை கொண்டாடும் Active Solutions மற்றும் Synology

15 ஆண்டு பங்குடமையை கொண்டாடும் Active Solutions மற்றும் Synology

August 9, 2018  01:06 pm

Bookmark and Share
இலங்கையில் தரவுத் தேக்கக தீர்வுகளை வழங்கும் மிகப் பாரிய நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழும் Active Solutions, நாட்டில் Synology உற்பத்திகளுக்கான விநியோகத்தர் என்ற வகையில் Synology Inc. உடன் பேணி வருகின்ற 15 ஆண்டு கால பங்குடமையைப் போற்றும் வகையில் அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இந்நிறுவனத்தால் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டுள்ளது.

இரு நிறுவனங்களுக்கும் இடையில் கட்டியெழுப்பப்பட்டுள்ள நீண்ட கால பங்குடமையைக் கொண்டாடும் விசேட விருது Synology Inc. இன் விற்பனை முகாமையாளரான மைக் ஷே அவர்களால் Active Solutions நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான அஹமட் ஷகீர் அவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. Synology வழங்கும் அதிநவீன உற்பத்திகள் தொடர்பான சிறப்பம்சங்களை இந்நிகழ்வில் கலந்துகொண்ட மீள்விற்பனையாளர்களுக்கு விளக்கும் விசேட பயிற்சி அமர்வொன்றையும் மைக் ஷே அவர்கள் நடாத்தியுள்ளார்.

2003 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட Active Solutions நிறுவனத்திற்கு 2004 ஆம் ஆண்டில் அனைத்து Synology உற்பத்திகளுக்குமான இலங்கை விநியோகத்தர் என்ற அந்தஸ்து கிடைக்கப்பெற்றது. நிறுவனத்தால் சந்தைப்படுத்தப்படும் Synology Network-Attached Storage (NAS) ஆனது பாரிய அளவு தரவுகளை பாதுகாப்பான மற்றும் பத்திரமான வழியில் வலையமைப்பொன்றின் மூலமாக தேக்கி வைத்துப் பேண நிறுவனங்களுக்கு இடமளிக்கின்றது. அரிதான நிகழ்வாக சாதனமொன்று சேதமடையும் பட்சத்தில் அதில் பேணப்பட்டுள்ள தரவை மீளப்பெறுதல் அடங்கலாக இது தொடர்பான பல்வேறுபட்ட சேவைகளை Active Solutions வழங்கி வருகின்றது. கடந்த காலங்களில் நிறுவனத்தின் கீழ் Synology வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை துரிதமாக வளர்ச்சி கண்டுள்ளதுடன், வைத்தியசாலைகள், தொலைக்காட்சி நிலையங்கள், காப்புறுதி நிறுவனங்கள், பெரு நிறுவனங்கள், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்கள் என பல்வேறுபட்ட நிறுவனங்கள் வாடிக்கையாளர் பட்டியலில் இணைந்துள்ளன.

2000 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட Synology நிறுவனம், தாய்வான் நாட்டைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஒரு தொழில்நுட்ப நிறுவனமாகத் திகழ்வதுடன், தற்போதைய cloud யுகத்தில் தரவினை நிர்வகித்தல், கண்காணிப்பை முன்னெடுத்தல் மற்றும் வலையமைப்புக்களை நிர்வகித்தல் போன்றவற்றை பாவனையாளர்கள் முன்னெடுக்கும் வழிமுறைகளில் புரட்சிகரமான மாற்றங்களை மேற்கொள்ள உதவும் வகையில் Network-Attached Storage (NAS), IP surveillance தீர்வுகள் மற்றும் வலையமைப்பு உபகரணம் போன்ற தீர்வுகளை வழங்கி வருகின்றது. நவீன தொழில்நுட்பத்தின் முழுமையான அனுகூலத்தை உபயோகித்து, மிகச் சிறந்த வாடிக்கையாளர் சேவையுடன் இணைந்த முற்போக்குச் சிந்தனை கொண்ட சிறப்பம்சங்களுடனான உற்பத்திகளை விநியோகிப்பதில் Synology அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.

Active Solutions நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான அஹமட் ஷகீர் அவர்கள் கலந்துகொண்டோர் முன்னிலையில் உரையாற்றுகையில்ரூபவ் ´இலங்கையிலுள்ள வாடிக்கையாளர்களுக்கு அதிநவீன தரவுத் தேக்கக தொழில்நுட்பத்தை வழங்கும் ஒரு உலகத்தரம் வாய்ந்த நிறுவனமாக Synology திகழ்வதில் சந்தேகங்கள் கிடையாது. கடந்த 15 ஆண்டுகளாக அந்நிறுவனத்துடன் மிக நெருக்கமாக இணைந்து பணியாற்றி வந்துள்ள எமக்கு இத்தகைய இனங்காணல் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமையை முன்னிட்டு நாம் மிகவும் கௌரவம் அடைந்துள்ளதுடன், எதிர்வரும் ஆண்டுகளில் இதனை தொடர்ந்தும் கட்டியெழுப்ப வேண்டும் என்பதில் மிகுந்த ஆவலுடன் செயற்பட்டு வருகின்றோம். பம்பரம் போல் சுழலும் இன்றைய உலகின் வேகத்திற்கு ஈடாக குறிப்பாக சில தொழிற்துறைகளைப் பொறுத்தவரையில் தகவல் தகவல்களை விரல் நுனிகளில் கொண்டிருக்க வேண்டிய சூழ்நிலைக்கு மத்தியில், நிறுவனங்களின் அளவு வித்தியாசமின்றி, எந்தவொரு நிறுவனத்தைப் பொறுத்தவரையிலும் பாதுகாப்பான, நம்பகமான மற்றும் பத்திரமான தரவுத் தேக்ககத்தைக் கொண்டிருப்பது மிகவும் முக்கியமாகும்.

இதன் பின்னணியில், நீண்ட கால அனுபவம், நிரூபிக்கப்பட்ட நிபுணத்துவம் மற்றும் விற்பனை செய்யப்படும் உற்பத்திகளுக்கு நம்பகமான விற்பனைக்குப் பின்னரான பேணற்சேவை ஆகியவற்றைக் கொண்டுள்ள நிறுவனங்களுடன் மட்டும் இணைந்து செயற்பட வேண்டியது நிறுவனங்களைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியமாகும்.

இத்தேவைப்பாடுகள் அனைத்தையும் சர்வசாதாரணமாக Active Solutions தன்னகத்தே கொண்டுள்ளதுடன், எமது கடந்த கால வரலாறு அதனை நிரூபிக்கின்றது´ என்று குறிப்பிட்டார்

Synology Inc. நிறுவனத்தின் விற்பனை முகாமையாளரான மைக் ஷே அவர்கள் உரையாற்றுகையில், ´Synology உற்பத்திகளைப் பொறுத்தவரையில் உலகில் மிகவும் பழமைவாய்ந்த விநியோக நிறுவனங்களுள் ஒன்றாக Active Solutions திகழ்ந்து வருவதுடன், கடந்த 15 ஆண்டுகளாகப் பேணி வந்துள்ள இந்த விசேட பங்குடமையைக் கொண்டாடி, அதிகரித்த அளவில் அது ஆற்றிவருகின்ற பங்களிப்பிற்கு இனங்காணல் அங்கீகாரம் வழங்குவதையிட்டு மகிழ்ச்சி அடைகின்றோம்.

ஒரு சர்வதேச நிறுவனம் என்ற வகையில், ஒவ்வொரு நாட்டிலும் எமது பங்காளர்களுடன் மிகவும் நெருக்கமாக இணைந்து செயற்படுவதை நாம் நம்பிக்கையுடன் முன்னெடுத்து வருவதுடன், நாம் வாடிக்கையாளர்களுக்கு வழங்க விரும்புகின்ற உயர் தர வாடிக்கையாளர் சேவையை வழங்கும் ஆற்றல் கொண்ட நிறுவனங்களுடன் மட்டுமே பங்குடமையை ஏற்படுத்தி வருகின்றோம்´ என்று குறிப்பிட்டார்.

Synology உற்பத்திகளை வழங்குவதற்குப் புறம்பாக, VPN, Data Recovery, Managed Wi-Fi, Network Troubleshooting மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆலோசனை வழங்கல் (IT Consultancy services) ஆகிய சேவைகளையும் Active Solutions வழங்கி வருகின்றது. தமது வாடிக்கையாளர்கள் மற்றும் மீள்விற்பனையாளர்கள் தமக்குத் தேவையான மிகச் சிறந்த ஆதரவை அடையப்பெறுவதை உறுதி செய்யும் வகையில், முழுமையான உட்கட்டமைப்பு ஆதரவை வழங்கக்கூடிய, சர்வதேச ரீதியாக நன்மதிப்புப் பெற்ற பல்வேறு வர்த்தக நாமங்களுடன் இணைந்து இந்நிறுவனம் செயற்பட்டு வருகின்றது.

Most Viewed