Back to Top

 ஒரு பந்து கூட வீசப்படாமல் போட்டி ரத்து

ஒரு பந்து கூட வீசப்படாமல் போட்டி ரத்து

August 10, 2018  10:02 am

Bookmark and Share
இங்கிலாந்து - இந்தியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்தது.

இந்நிலையில் 2 வது டெஸ்ட் புகழ்பெற்ற லோர்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற இருந்தது.

நாணய சுழற்சிக்கு முன் மழை பெய்தது. தொடர்ந்து மழைத்தூறல் இருந்து கொண்டே இருந்ததால் மதிய உணவு இடைவேளை வரை போட்டி தொடங்கப்படவில்லை.

அதன் பின்னரும் மழைத்தூறல் விட்டுவிட்டு தூவிக் கொண்டிருந்ததால் முதல் நாள் ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.

அதன்படி ஒரு பந்து கூட வீசப்படாமல் போட்டி ரத்து செய்யப்பட்டது.