Back to Top

புகையிரத தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த வேலைநிறுத்தம் தொடர்கிறது

புகையிரத தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த வேலைநிறுத்தம் தொடர்கிறது

August 10, 2018  10:21 am

Bookmark and Share
புகையிரத தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த வேலைநிறுத்தம் இன்றும் (10) தொடர்கிறது.

புகையிரத ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன் வைத்து புதன் கிழமை முதல் குறித்த வேலை நிறுத்த போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் நாள்தோறும் பல்வேறு சிரமங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.

தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை வேலை நிறுத்தம் தொடரும் எனவும் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.