Back to Top

பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவியில் மாற்றம் இல்லை

பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவியில் மாற்றம் இல்லை

August 10, 2018  10:27 am

Bookmark and Share
பாராளுமன்றத்தின் தற்போதைய விதிமுறைகளுக்கும் அரசியலமைப்புக்கும் அமைய எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் மாற்றம் செய்யும் அதிகாரம் தனக்கு இல்லை என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற அமர்வுகள் இன்று (10) ஆரம்பமான போதே சபாநாயகர் கரு ஜயசூரிய இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவை எதிர்கட்சி தலைவராக நியமிக்குமாறு ஒன்றிணைந்த எதிர்கட்சியின் 8 பாராளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கை தொடர்பான தமது நிலைப்பாட்டை அறிவிக்கும் போதே சபாநாயகர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Most Viewed