Back to Top

இலங்கையின் மிகப்பெரிய தகவல் தொடர்பாடல் நிகழ்வுடன் கைகோர்த்துள்ள SLIIT

இலங்கையின் மிகப்பெரிய தகவல் தொடர்பாடல் நிகழ்வுடன் கைகோர்த்துள்ள SLIIT

August 10, 2018  01:03 pm

Bookmark and Share
இலங்கையின் தகவல் மற்றும் தொழில்நுட்ப கல்வியகமானது CSSL உடன் இணைந்து இலங்கையின் மிகப்பெரிய தகவல் தொடர்பாடல் நிகழ்வான தேசிய தகவல் தொடர்பாடல் கருத்தரங்கு 2018 இல் உயர்கல்வி பங்குதாரருக்கான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட்டுள்ளது.

இந்நிகழ்வானது ´அனைத்தையும் மாற்றவல்ல தகவல் தொடர்பாடல்´ எனும் தலைப்பின் கீழ் ஒக்டோபர் மாத முதல் வாரத்தில் நடைபெறவுள்ளது. இத்தேசிய விழாவில் நான்காவது வருடமாக ´ கல்வியகம் பங்குதாரராக செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

SLIIT கல்வியகத்தின் அபிவிருத்தி மற்றும் பொறியியற் பிரிவு நிர்வாகியான திரு. உதித கமகே, SLIIT வணிக பாடசாலை மற்றும் CSSL இன் மாணவ ஆலோசகரான சமந்த தெலிச்சகொட, CSSL தலைவரான திரு யசாஸ் விஷுத்தி அபேவிக்ரம மற்றும் CSSL இன் பொருளாளரான திரு. அஜந்த அதுகோரல ஆகியோர் இவ்வுடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.

இந்நிகழ்வானது அதன் முக்கிய பங்குதாரரான NITC ஊடாக 1000ற்கும அதிக IT துறைசார்ந்த சர்வதேச தரத்தில் முக்கியம் வாய்ந்த தலைமை தகவல் நிர்வாகிகள், IT சார் நிறுவனங்களின் தலைவர்கள், முகாமையாளர்கள், சிரேஷ்ட முகாமையாளர்கள், மென்பொருள் பொறியியலாளர்கள் மற்றும் இத்துறைசார் ஏனைய பங்குதாரர்கள் அனைவரையும் கவர்ந்த சர்வதேச தர நிகழ்வாக விளங்குகிறது. அதுமட்டுமன்றி இந்நிகழ்வில் 30ற்கும் அதிக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பேச்சாளர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

3 மூன்று நாட்களாக தொடர்ந்து நடக்கும் இந்நிகழ்வினை பிரதம விருந்தினரான மதிப்பிட்குரிய ஜனாதிபதி திரு.மைத்திரிபால சிறிசேன அவர்கள் 2018 அக்டோபர் 2 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கவுள்ளார். இந்நிகழ்வில் பல துறைசார் வல்லுனர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளதுடன் அவர்கள் திறந்த விவாதத்தின் மூலம் தங்கள் அறிவையும் அனுபங்களையும் பகிர்ந்துக் கொள்ளவுள்ளனர். அத்துடன் பேச்சாளர்கள் பின்வரும் தலைப்புகளின் கீழ் தம் உரைகளை நிகழ்த்தவுள்ளனர். அவையாவன : ICA, AI தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் சமூக தாக்கங்கள், ஸ்தீரத்தன்மை, டிஜிட்டல் வாழ்வு, சமூக தகவல் பாதுகாப்பு, நோக்கம் மற்றும் குறிக்கோள், தனியுரிமை, தரவு பாதுகாப்பு, தன்னியக்கமாதல், ICT உள்ளடங்கிய சமூகம், CxO கருத்துக்களம் என்பனவையாகும். CSSL இனால் நடாத்தப்படும் ICT விருது வழங்கல் விழாவும் NITC ஓர் அங்கமாகவுள்ளது. இவ்விருது வழங்கல் விழாவானது, இலங்கை ICT துறையில் சேவையாற்றுவோரை இணங்கண்டு அவர்களை ஊக்கப்படுத்தும் விதத்தில் வழங்கப்படுகிறது.

Most Viewed