Back to Top

பிட்டிகலையில் தனது 262 வது கிளையைத் திறந்து வைத்துள்ள கொமர்ஷல் வங்கி

பிட்டிகலையில் தனது 262 வது கிளையைத் திறந்து வைத்துள்ள கொமர்ஷல் வங்கி

August 10, 2018  02:00 pm

Bookmark and Share
கொமர்ஷல் வங்கி இலங்கையின் தென் பகுதியில் காலி மாவட்டத்தின் கீழ் வரும் பிட்டிகலையில் புதிய கிளை ஒன்றை திறந்து வைத்துள்ளதன் மூலம் தென் பகுதியில் தனது நிலையை மேலும் ஸ்திரப்படுத்திஉள்ளது.

வங்கியின் இந்தப் புதிய 262 வது கிளை பிட்டிகலை நகரில் எல்பிட்டியவீதி, பிட்டிகலை என்ற முகவரியில் அமைந்துள்ளது. முழு வசதிகளையும் கொண்ட இந்தக் கிளை ATM இயந்திரம், பண மீள்சுழற்சி இயந்திரம் (CRM)காசோலை வைப்பு இயந்திரம், இணைய வங்கிச் சேவை என தன்னியக்க வசதிகள் அனைத்தையும் கொண்டுள்ளது.

இதன் மூலம் இரவு பகல் என எல்லா நேரங்களிலும் வங்கிச் சேவைகளைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக அமைந்துள்ளது. இந்தக் கிளை திறப்பின் மூலம் கொமர்ஷல் வங்கியின் நாடு தழுவிய ATM இயந்திர வலயமைப்பின் எண்ணிக்கை 778 ஆக அதிகரித்துள்ளது.

புதிய கிளை திறப்பு விழாவில் கொமர்ஷல் வங்கித் தலைவர் தர்மாதீரசிங்க பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.