
ஒரே குடும்பத்தின் மூன்று சகோதரிகளை துஷ்பிரயோகம் செய்தவருக்கு விளக்கமறியல்
August 10, 2018 04:15 pm
மொனராகலை, எதிமலே பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பாடசாலை
மாணவிகள் மூன்று பேரை பல்வேறு தடவைகள் துஷ்பிரயோகம் செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இந்த சிறுமிகளை கடந்த 2012ம் ஆண்டு முதல் துஷ்பிரயோகம் செய்துள்ளதுடன், மூத்த சகோதரிக்கு அப்போது
10 வயது என்று தெரிய வந்துள்ளது.
சந்தேகநபரால் குறித்த சகோதரிகள் பல ஆண்டுகளான பல தடவைகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த
சிறுமிகள் தற்போதும் பாடசாலை செல்லும் மாணவிகள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதே பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருக்கும் 05 மகள் இருப்பதாக
பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் அந்தக் குடும்பத்துடன் நெருங்கிய உறவை பேணி வந்துள்ள போதிலும் பெற்றோர் அதனை
அறிந்திருக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் அவசர இலக்கத்திற்கு கிடைத்த அழைப்பின் பேரில் சந்தேகநபர் கைது செய்யப்பட்ட பின்னர் நடத்தப்பட்ட
விசாரணைகளில் விடயங்கள் தெரிய வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் நேற்று சியம்பலாண்டுவ நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதன் பின்னர் இம்மாதம் 23ம் திகதி வரை
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட சிறுமிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.