Back to Top

பயணிகளின் நலன் கருதி 9 புகையிரதங்கள் இன்று மாலை சேவையில்!

பயணிகளின் நலன் கருதி 9 புகையிரதங்கள் இன்று மாலை சேவையில்!

August 10, 2018  04:29 pm

Bookmark and Share
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து 9 புகையிரதங்கள் இன்று மாலை சேவையில் ஈடுபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகையிரத தொழிற்சங்கங்கள் சில ஆரம்பித்துள்ள பணிப் புறக்கணிப்பு போராட்டம் காரணமாக கடந்த புதன் கிழமை முதல் நாடு முழுவதும் புகையிரத சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.

இந்நிலையில் பயணிகளின் நலன் கருதி இந்த ரயில் ​சேவைகளை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக புகையிர திணைக்களம் தெரிவித்துள்ளது.

புகையிரதங்கள் செல்லும் நேர அட்டவணை

பிற்பகல் 3.55 - கொழும்பு கோட்டை முதல் அனுராதபுரம் வரை

மாலை 4.35 - கொழும்பு கோட்டை முதல் கண்டி வரை

மாலை 4.45 - மருதானை முதல் மாத்தறை வரை

மாலை 5.00 - கொழும்பு கோட்டை முதல் சிலாபம் வரை

மாலை 5.15 - கொழும்பு கோட்டை முதல் ரம்புக்கன வரை

மாலை 5.20 - கொழும்பு கோட்டை முதல் அவிசாவளை வரை

மாலை 5.30 - மருதானை முதல் காலி வரை

மாலை 6.00 - கொழும்பு கோட்டை முதல் மஹவ வரை

மாலை 6.10 - கொழும்பு கோட்டை முதல் சிலாபம் வரை

Most Viewed