Back to Top

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு

August 10, 2018  04:45 pm

Bookmark and Share
மலையகத்தில் தொடரும் மழையின் காரனமாக ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் ஸ்டதன் பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த அனர்த்தம் இன்று (10) மதியம் 12.30 மணி அளவில் இடம் பெற்றுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் ஸ்டதன் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரனமாக குறித்த வீதியின் ஊடாக போக்குவரத்தினை மேற்கொள்ளும் வாகன சாரதிகள் ஒரு வழி போக்குவரத்தினை மேற்காள்ளுமாறும் ஹட்டன் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் ஊடாக போக்குவரத்தினை மேற்கொள்ளும் சாரதிகள் மிக அவதானமாக வாகனத்தை செலுத்துமாறும் கோரபட்டுள்ளனர்.

இந்த பகுதியில் ஏற்பட்டுள்ள மண் மேட்டினை அகற்றுவதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபையினருக்கு அறிவிக்கபட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

(மலையக நிருபர் சதீஸ்குமார்)