
வட மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் கைது
August 10, 2018 05:01 pm
முல்லைத்தீவு மீனவர்களின் போராட்டம் கடந்த 2 ஆம் திகதி இடம்பெற்றது.
இதன் போது, பொதுச் சொத்துக்கள் சேதமாக்கப்பட்டுள்ளமை குறித்து முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதன் பேரில், குறித்த முறைப்பாடு மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் வட மாகாண சபை உறுப்பினர் து. ரவிகரன் முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
கைது செய்யப்பட்ட மாகாண சபை உறுப்பினர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளாதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வட மாகாண சபை உறுப்பினர் து. ரவிகரனை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
(முல்லைத்தீவு நிருபர் தவசீலன்)