Back to Top

இன்று சேவையில் ஈடுபடும் புகையிரதங்களும் நாளை நிறுத்தப்படும்

இன்று சேவையில் ஈடுபடும் புகையிரதங்களும் நாளை நிறுத்தப்படும்

August 10, 2018  05:43 pm

Bookmark and Share
இன்று சேவையில் ஈடுபடுத்தப்படும் புகையிரதங்கள் நாளைய தினம் சேவையில் ஈடுபட மாட்டாது என்று புகையிரத சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட கூறினார்.

இதுவரையில் எவ்வித பேச்சுவார்த்தையோ அல்லது தீர்வோ கிடைக்காத காரணத்தால் புகையிரத வேலை நிறுத்தம் தொடர்ந்து இடம்பெறும் என்று இந்திக தொடங்கொட கூறினார்.

அதேநேரம் இன்று சேவையில் ஈடுபடுத்தப்படும் புகையிரதங்களையும் நாளைய தினம் நிறுத்திவிடுவதாக அவர் கூறியுள்ளார்.

நியாயமற்ற கோரிக்கைகளை தாம் முன்வைக்கவில்லை என்றும் தேவையென்றால் பேச்சுவாார்த்தையில் ஈடுபடுவதற்கு தொழிற்சங்கம் தயார் என்றும் இந்திக தொடங்கொட மேலும் கூறினார்.

தற்போது புகையிரதங்கள் சில கொழும்பு கோட்டையை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும், இன்று மாலையாகும் போது புகையிரத சேவையில் முன்னேற்றம் ஏற்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் புகையிரத திணைக்களத்தின் மேலதிக பொது முகாமையாளர் விஜய சமரசிங்க இன்று காலை கூறினார்.