Back to Top

அரசாங்கத்தின் செயற்றிறன் இன்மையே காரணம்

அரசாங்கத்தின் செயற்றிறன் இன்மையே காரணம்

August 10, 2018  07:25 pm

Bookmark and Share
புகையிரத வேலை நிறுத்தம் உட்பட வெவ்வேறு துறைகளின் தொடர்ச்சியான வேலை நிறுத்தங்களுக்கு காரணம் அரசாங்கத்தின் செயற்றிறன் இன்மையே என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

பெல்லன்வில ரஜமகா விகாரையில் நேற்று இரவு இடம்பெற்ற மத நிகழ்வின் பின்னர் ஊடகங்களிடம் பேசும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

பிரச்சினை இருந்தால் அதனை பேச்சுவார்த்தை ஊடாக தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் இந்த பிரச்சினை காரணமாக பொதுமக்கள் பாரிய நெருக்கடிகளை எதிர் கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.