Back to Top

நீரில் மூழ்கி மாணவர் ஒருவர் உயிரிழப்பு

நீரில் மூழ்கி மாணவர் ஒருவர் உயிரிழப்பு

August 11, 2018  10:43 am

Bookmark and Share
ஊர்காவற்துறை, காரைநகர் பிரதேசத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

காரைநகர் பிரதேசத்தில் கடலில் நீராடச் சென்ற மூன்று மாணவர்களில் ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காரைநகர் சிவகாமி அம்மான் கோவில் பிரதேசத்தைச் ​சேர்ந்த ​15 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சடலம் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Most Viewed