Back to Top

 கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் காலமானர்

கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் காலமானர்

August 16, 2018  08:24 am

Bookmark and Share
இங்கிலாந்து மற்றும் மேற்கு இந்திய அணிகளை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்தி இந்திய அணிக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றிகளை தேடி தந்தவர் அஜித் வடேகர் (77).

பட்டோடிக்கு பிறகு 1970 களில் இந்திய அணியின் தலைவராக பொறுபேற்ற வடேகர் அணியை திறம்பட வழிநடத்தி சென்றதோடு அல்லாமல் சிறந்த இடது கை துடுப்பாட்ட மற்றும் ஸ்லிப் பீல்டராகவும் வலம் வந்தவர்.

1964 ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான இவர், 37 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1 சதம் உள்பட 14 அரை சதங்களுடன் 2113 ஓட்டங்களை குவித்துள்ளார். 1974 ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு இந்திய அணியின் பயிற்சியாளர், மேனேஜர், தேர்வுக்குழு தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளையும் வடேகர் வகித்துள்ளார்.

இந்தியாவின் நான்காவது உயரிய விருதன பத்மஸ்ரீ விருது, அர்ஜூனா விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது உள்பட பல விருதுகளை அஜித் வடேகர் பெற்றுள்ளார்.

இந்நிலையில், சமீபகாலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மும்பை தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இவர், நேற்று (ஆகஸ்ட் 15) காலமானார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கிரிக்கெட்டில் ஒருநாள் போட்டிகள் அறிமுகமான பிறகு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் முதல் தலைவராக இருந்த பெருமைக்குறியவர் அஜித் வடேகர். 3 ஆம் நிலை வீரராக களமிறங்கும் இவர் ஆக்ரோஷமான விளையாட்டை வெளிப்படுத்தும் வீரராக அறியப்பட்டார்.

1971 ஆம் ஆண்டுகளில் பலம் பொருந்திய அணிகளாக திகழ்ந்த இங்கிலாந்து மற்றும் மேற்கு இந்திய அணிகளை அவர்கள் மண்ணிலேயே வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது நிகழ்வுகள் இந்திய அணியின் வரலாற்று சிறப்பு வாய்ந்த வெற்றிகளாக இன்றளவும் கருதப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.