Back to Top

சீரற்ற காலநிலையால் மலைநாட்டிற்கான புகையிரத   சேவையில் பாதிப்பு

சீரற்ற காலநிலையால் மலைநாட்டிற்கான புகையிரத சேவையில் பாதிப்பு

August 18, 2018  09:49 am

Bookmark and Share
சீரற்ற காலநிலை காரணமாக மத்திய மலைநாட்டிற்கான புகையிரத சேவையில் பாதிப்பு எற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படடுகிறது.

ஹட்டன் - கொட்டகல புகையிரத மார்க்கத்தில் 119வது கட்டைக்கு அருகில் சிங்கமலே, பிங்கிய பிரதேசத்தில் மண் மேடு சரிந்து விழுந்துள்ளதால் புகையிரத சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக புகையிரத சேவையில் தாமதம் நிலவுவதாக ஹட்டன் புகையிரத நிலைய அதிபர் கூறியுள்ளார்.