Back to Top

சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்ந்த ஐவர் கைது

சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்ந்த ஐவர் கைது

September 11, 2018  05:05 pm

Bookmark and Share
வட்டவலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ரொஸால, ஹட்டன் ஓயாவில் பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 5 பேரை வட்டவலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இன்று (11) பிற்பகல் 3.15 மணி அளவில் குறித்த நபர்களை வட்டவலை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வட்டவலை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த 5 சந்தேக நபர்களும் கைது செய்யபட்டதாகவும், மாணிக்கக்கல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் பொலிஸார் மீட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டவர்கள் வட்டவலை ரொஸால பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யபட்டவர்கள் நாளை (12) ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தபட உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வட்டவலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(மலையக நிருபர் சதீஸ்குமார்)

Most Viewed