Back to Top

கொழும்பு லோட்டஸ் வீதிக்கு பூட்டு

கொழும்பு லோட்டஸ் வீதிக்கு பூட்டு

September 12, 2018  01:40 pm

Bookmark and Share
கொழும்பு லோட்டஸ் வீதி தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் அப்பகுதியில் நடத்துகின்ற ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாகவே அவ்வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கொழும்பு லேக்ஹவுஸ் சுற்றுவட்டத்துக்கு அருகிலும் தற்போது வாகனப் போக்குவரத்துக்கு பெரிதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.