Back to Top

முப்படைகளின்   பிரதானி வெளிநாட்டில் இருந்து வந்தவுடன் வாக்குமூலம் பெறப்படும்

முப்படைகளின் பிரதானி வெளிநாட்டில் இருந்து வந்தவுடன் வாக்குமூலம் பெறப்படும்

September 12, 2018  03:50 pm

Bookmark and Share
2008 ஆம் ஆண்டு கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமற் போன சம்பவம் தொடர்பில் முன்னாள் லெப்டினென் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி, எதிர்வரும் 26ம் திகதி வரை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன உத்தரவிட்டதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.

சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருப்பதற்கு முன்னாள் கடற்படைத் தளபதியாக இருந்த தற்போதைய முப்படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணர்தன உதவி ஒத்தாசை புரிந்துள்ளமைக்கு நேரடி சாட்சிகள் கிடைத்திருப்பதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் நீதிமன்றில் தெரிவித்தனர்.

அதன்படி முப்படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணர்தன கடந்த 10ம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்க வேண்டும் என்று குறித்த திகதிக்கு மூன்று தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட போதிலும் அவர் ஆஜராகாமல் வௌிநாடு சென்றுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் நீதிமன்றில் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும் அவர் இம்மாதம் 19ம் திகதி மீண்டும் நாடு திரும்புவார் என்று அறியக் கிடைத்துள்ளதாகவும், அதன்பின்னர் அவரிடம் வாக்குமூலம் பெற்று நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்பிப்பதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.



குறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை அத தெரண ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது.