Back to Top

புகையிரத தண்டவாளத்திற்கு அருகில் மனித எலும்புக்கூடு மீட்பு

புகையிரத தண்டவாளத்திற்கு அருகில் மனித எலும்புக்கூடு மீட்பு

September 12, 2018  07:24 pm

Bookmark and Share
யாழ் காங்கேசன்துறை புகையிரத தண்டவாளத்திற்கு அருகாமையில் சந்தேகத்திற்கிடமானமுறையில் மனித எலும்புக்கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனித எலும்புக்கூடு காங்கேசன்துறை புகையிரத தண்டவாளத்துக்கு சுமார் 50 மீற்றர் தூரத்தில் இருந்து இன்று (12) காலை அடையாளம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த எலும்புக்கூடு 60 வயது மதிக்கதக்க ஆணினுடையது எனவும் இறந்து சில மாதங்களே இருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகித்துள்ளனர்.

குறித்த எலும்புக்கூட்டை மல்லாகம் நீதிமன்ற பதில் நீதிவான் ஆனந்தராஜா மற்றும் யாழ் சட்ட வைத்திய அதிகாரி மயூரன் ஆகியேர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.

இந்த எலும்புக்கூடு தொடர்பில் உடற்கூற்று பரிசேதனைக்கு நீதவான் உத்தரவிட்டதுடன் எலும்புக்கூடு தொடர்பில் மேலதிக விசாரணைகளை காங்கேசன்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(யாழ். நிருபர்கள் சுமித்தி, பிரதீபன்)