Back to Top

மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் காயம்

மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் காயம்

September 12, 2018  09:24 pm

Bookmark and Share
கொழும்பு, மாளிகாவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

காயமடைந்த இளைஞர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.