Back to Top

IT Gallery அறிமுகப்படுத்தியுள்ள Hikvision இன் EZVIZ சர்வதேச ஸ்மார்ட் ஹோம் பாதுகாப்புத் தீர்வுகள்

IT Gallery அறிமுகப்படுத்தியுள்ள Hikvision இன் EZVIZ சர்வதேச ஸ்மார்ட் ஹோம் பாதுகாப்புத் தீர்வுகள்

September 13, 2018  10:30 am

Bookmark and Share
வீடியோ கண்காணிப்பு உற்பத்திகள் மற்றும் தீர்வுகளை வழங்குவதில் முன்னிலை வகித்து வருகின்ற ஒரு விநியோகத்தராகவும், இலங்கையில் Hikvision இன் தேசிய விநியோகத்தராகவும் திகழ்ந்து வருகின்ற IT Gallery அண்மையில் கிங்ஸ்பெரி ஹோட்டலில் இடம்பெற்ற நிகழ்வில் சர்வதேச ஸ்மார்ட் ஹோம் பாதுகாப்பு வர்த்தகநாமமான EZVIZ இனை அறிமுகப்படுத்தியுள்ளது.

நுகர்வோர் மற்றும் குடியிருப்புக்களை இலக்காகக் கொண்டு Hikvision இன் துணை நிறுவனமாக EZVIZ இயங்கி வருகின்றது. உலகின் மிகப் பாரிய பாதுகாப்பு உற்பத்தியாளர் என்ற வகையில், Hikvision ஆனது டிஜிட்டல்மயமாக்கம், வலையமைப்பாக்கம் மற்றும் புலனாய்வு ஆகியவற்றைப் பொறுத்தவரையில் வீடியோ கண்காணிப்புத் தொழிற்துறையில் பாரிய புரட்சியை ஏற்படுத்துவதில் முன்னோடியாகத் திகழ்ந்து வந்துள்ளதுடன், புலனாய்வு தேக்கக தீர்வுகள் (Intelligent Storage Solutions) ஸ்மார்ட் ஹோம் தீர்வுகள் (Smart Home Solutions - EZVIZ) அத்துமீறி நுழைபவர்களை கண்டறியும் கம்பியுடனான மற்றும் கம்பியில்லா அலாரம் தீர்வுகள் (Wired and Wireless intruder alarm solutions -Pyronix) மற்றும் தரவுப் பரிமாற்ற உபகரணம் (data transmission equipment) மற்றும் ஊடகம் (media) போன்ற கண்காணிப்பு சாராத உற்பத்திகள் போன்ற புதிய வியாபார துறைகளிலும் கால்பதித்துள்ளது. Hikvision இன் பிராந்திய பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன், இலங்கைச் சந்தையில் அறிமுகமாகின்ற EZVIZ உற்பத்தி வரிசை தொடர்பில் அவர்கள் நிகழ்வில் பங்குபற்றியோருக்கு விளக்கமளித்தனர். TVI introduction, IP Introduction, EZVIZ & storage மற்றும் Non-CCTV & transmission ஆகிய நான்கு உற்பத்திகள் தொடர்பான விளக்க அமர்வுகளை Hikvision உற்பத்தி முகாமையாளர்களான ரூபியோஹோங், அலிஸ் ஹு, எலி யு மற்றும் ஜெரமி வாங் ஆகியோர் நிகழ்த்தியதுடன், உற்பத்திகள் தொடர்பான விரிவான தகவல் விபரங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

நாடெங்கிலுமுள்ள நிறுவனப் பங்காளர்கள் மத்தியில் கடந்த ஆண்டில் மிகச் சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்திவர்களுக்கு இனங்காணல் அங்கீகாரம் அளித்து, வெகுமதியளிக்கும் மேடையாகவும் இந்நிகழ்வு பயன்படுத்தப்பட்டது. இலங்கையின் அனைத்துப் பிராந்தியங்களிலிருந்தும் 350 இற்கும் மேற்பட்ட நிறுவனங்களை உள்ளடக்கியவாறு IT Gallery இன் ஒட்டுமொத்த பங்காளர்கள் தளத்தின் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் சமூகமளித்திருந்தனர். பிராந்திய விநியோகத்தர்களை உள்ளடக்கிய “Gold Dealer Partners” என்ற பிரிவிலுள்ள பங்காளர்களும், மற்றும் “Gold Value Added Solutions Partners” என அழைக்கப்படுகின்ற ஏனைய தீர்வுகள் மற்றும் அமைப்பு ஒருங்கிணைப்பு பங்காளர்களும் இதில் அடங்கியுள்ளனர்.

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உற்பத்திகள் மற்றும் சேவைகள் தொடர்பில் சர்வதேசரீதியாக பிரசித்தி பெற்ற வர்த்தக நாமங்களை இலங்கையில் வழங்கும் ஒரு முன்னணி பெறுமதி சேர் விநியோகத்தர்களுள் ஒன்றாக IT Gallery திகழ்ந்து வருகின்றது. 2007 ஆம் ஆண்டில் தொழிற்பட ஆரம்பித்த காலம் முதற்கொண்டு, அமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள், மீள்விற்பனையாளர்கள் மற்றும் ஆலோசகர்களை உள்ளடக்கிய தனது வலையமைப்பினை விஸ்தரிப்பதன் ஊடாக இலங்கையில் விசாலமான சந்தையை அது தொடர்ச்சியாக எட்டி வருகின்றது. Hikvision உடனான பங்குடமைக்குப் புறம்பாக, EAST Power மற்றும் UPS solutions, Pantum monochrome laser printers மற்றும் toners, A4Tech computer accessories, OCEAN multimedia products, மற்றும் GnG Compatible Toners ஆகியவற்றின் பெறுமதி சேர் விநியோகத்தராகவும் IT Gallery செயற்பட்டு வருகின்றது.

IT Gallery Computers Private Limited நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான டிலாந்த பெரேரா அவர்கள் இந்நிகழ்வில் உரையாற்றுகையில், ´Hikvision இலங்கையிலும், உலகெங்கிலும் வலுவான நன்மதிப்பினைக் கட்டியெழுப்பியுள்ளதுடன், வீடியோ கண்காணிப்பு தீர்வுகளை வழங்குவதில் உலகின் மிகப் பாரிய உற்பத்தி நிறுவனமாகவும் திகழ்ந்து வருகின்றது. நுகர்வோர் மற்றும் குடியிருப்புக்களை இலக்காகக் கொண்டு Hikvision இன் துணை நிறுவனமாக EZVIZ இயங்கி வருவதுடன், Hikvision இன் அனுபவம் மற்றும் அறிவு ஆகியவற்றை அத்திவாரமாகக் கொண்டு, வலுவான, வர்த்தகத்தரம் கொண்ட வீடியோ உற்பத்திகளை ஸ்மார்ட் ஹோம் சந்தைக்கு அறிமுகம் செய்வதை இலக்காகக் கொண்டுள்ளது. வீட்டுப் பாதுகாப்பு உற்பத்திகளுக்கான கேள்வி தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்லும் நிலையில், தமது வீடுகளுக்கான பாதுகாப்பு உத்தரவாதத்துடன், மன நிம்மதியையும் தருகின்ற உயர் தொழில்நுட்பம் கொண்ட, புத்தாக்கமான, உலகத்தரம் வாய்ந்த உற்பத்திகளை நுகர்வோர் எதிர்பார்க்கின்றனர். இத்தேவையை EZVIZ மிகச் சிறப்பாக நிறைவேற்றுகின்றது,´ என்று குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், ´எமது பங்காளர்களுக்கும் இச்சந்தர்ப்பத்தில் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புவதுடன், கடந்த ஆண்டில் மிகச் சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்திய பங்காளர்களின் முயற்சிகளையும் நான் பாராட்டுகின்றேன். அவர்களுடைய கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியன போட்டித்திறன் மிக்க சந்தையில் நாம் முகங்கொடுத்த பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும், சிறப்பான விற்பனைப் பெறுபேறுகளுடன் நாம் மகத்தான ஆண்டாக அதனை மாற்றியமைப்பதை உறுதி செய்துள்ளன. எமது உற்பத்தி வரிசையானது விஸ்தரிப்பு செய்யப்பட்டு வருகின்ற நிலையில், மேலும் பலர் எம்முடன் பங்காளர்களாக இணைந்து, Hikvision போன்ற பிரபல சர்வதேச வர்த்தகநாமங்களுடன் கூட்டிணைந்து கொள்வதற்கு முன்வருவர் என நான் திடமாக நம்புகின்றேன்,´ என்று குறிப்பிட்டார்.

புத்தாக்கமான வீடியோ கண்காணிப்பு உற்பத்திகள் மற்றும் தீர்வுகளை வழங்குவதில் உலகில் முன்னிலை வகிக்கும் நிறுவனங்களுள் ஒன்றாக Hikvision பரந்த அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. ஓடியோ மற்றும் வீடியோ மறைக்குறியாக்கம் (encoding), வீடியோ படவாக்கம் (video image processing), மற்றும் related data storage, ஆகியவற்றுடன், cloud computing, big data மற்றும் deep learning போன்ற முன்னோக்கிய தொழில்நுட்பங்களையும் நிறுவனம் மேம்படுத்தியுள்ளது. 30,000 இற்கும் மேற்பட்ட ஊழியர்களுடனும், அவற்றில் 9,300 இற்கும் மேற்பட்ட ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பொறியியலாளர்களுடனும் இயங்கி வருகின்ற இந்நிறுவனம், தனது வருடாந்த விற்பனை வருமானத்தில் 7-8% தொகையை தொடர்ச்சியாக உற்பத்தி புத்தாக்கத்தின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்காக ஆண்டுதோறும் முதலீடு செய்து வருகின்றது.

Most Viewed