Back to Top

ரி 56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தும் 6 தோட்டாக்கள் மீட்பு

ரி 56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தும் 6 தோட்டாக்கள் மீட்பு

September 13, 2018  11:02 am

Bookmark and Share
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹட்டன் டன்பார் பகுதியில் உள்ள வீட்டு பாத்தி ஒன்றில் இருந்து ரி 56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தும் 6 தோட்டாக்கள் மீட்கபட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தோட்டாக்கள் இன்று (13) காலை 9 மணி அளவில் மீட்கபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிரதேச வாசிகளால் ஹட்டன் பொலிஸாருக்கு வழங்கபட்ட தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், குறித்த தோட்டாக்களையும் இராணுவத்தினர் பயன்படுத்தும் நேர கடிகாரம் ஒன்றையும் மீட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(மலையக நிருபர் சதீஸ்குமார்)

Most Viewed