
350 கோடி டொலருக்கு மேலான அந்நியச் செலாவணி இலங்கைக்கு
September 13, 2018 10:52 pm
மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றி வரும் இலங்கையர்கள் மூலம் 2014ம் ஆண்டிலிருந்து மூவாயிரத்து 350 கோடி டொலருக்கு மேலான அந்நியச் செலாவணி கிடைத்திருப்பதாக பிரதியமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாத கணக்கெடுப்புக்களின் பிரகாரம், மத்திய கிழக்கு நாடுகளில் 6 இலட்சத்து 37 ஆயிரத்திற்கு மேற்பட்ட இலங்கையர்கள் பணியாற்றி வருவதாக பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.
இவர்களில் சவுதி அரேபியாவில் பணியாற்றுவோரின் எண்ணிக்கை அதிகமாகும்.