Back to Top

Singer Sri Lanka மற்றும் Sony International ஆகியன இணைந்து புதிய உயர் வலு கொண்ட Sony ஹோம் ஓடியோ சிஸ்டத்தை அறிமுகம்

Singer Sri Lanka மற்றும் Sony International ஆகியன இணைந்து புதிய உயர் வலு கொண்ட Sony ஹோம் ஓடியோ சிஸ்டத்தை அறிமுகம்

September 14, 2018  09:49 am

Bookmark and Share
நீடித்து உழைக்கும் நுகர்வோர் சாதனங்களின் சில்லறை விற்பனையில் நாட்டில் முன்னிலை வகித்து வருகின்ற நிறுவனமான சிங்கர் (ஸ்ரீலங்கா) பீஎல்சி, மற்றும் Sony International ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து அண்மையில் கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் இடம்பெற்ற பிரத்தியேகமான நிகழ்வில் ஆறு புதிய உயர் வலு கொண்ட ஹோம் ஓடியோ சிஸ்டம்களை அறிமுகம் செய்து வைத்துள்ளன.

சிங்கர் ஸ்ரீலங்கா பீஎல்சி நிறுவனத்தின் சார்பில் சிங்கர் குழுமத்தின் பணிப்பாளர் சபைத் தலைவரான மொஹான் பண்டிதகே, சிங்கர் குழும பிரதம நிறைவேற்று அதிகாரியான அசோக பீரிஸ், பிரதம தொழிற்பாட்டு அதிகாரியான மகேஷ் விஜேவர்த்தன, சந்தைப்படுத்தல் துறை பணிப்பாளரான குமார் சமரசிங்க மற்றும் வர்த்தகநாம முகாமையாளரான தாரக வர்ணகுலசூரிய ஆகியோரும், Sony International நிறுவனத்தின் சார்பில் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்திற்கான சந்தைப்படுத்தல் துறை தலைமை அதிகாரியான ஜெரமி ஹெங், Sony International (Singapore) Ltd இலங்கை பிரதிநிதி அலுவலகத்தின் கிளை முகாமையாளரான ஜஸ்டின் வோங் மற்றும் இலங்கைக்கான சந்தைப்படுத்தல் துறை தலைமை அதிகாரியான டில்ஷான் கம்மம்பில ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளனர். Sony ஓடியோ உற்பத்திகளின் வர்த்தகநாமத் தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கையின் முன்னணி இசைக்கலைஞர்களான பாத்திய மற்றும் சந்தூஷ; ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளனர்.

Shake3-box model வகுப்பைச் சேர்ந்த MHC-M60D, MHC-M40D மற்றும் MHC-M20D மற்றும் அனைத்தும் ஒன்றிணைந்த (all-in-one box style) வகுப்பைச் சேர்ந்த MHC-V81D, MHC-V71D, MHC-V41D மற்றும் MHC - V21D ஆகிய 6 ஹோம் ஓடியோ சிஸ்டம் வகுப்புக்கள் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டதுடன், எந்தவொரு அறையிலும் அதிரும் இசைக்கான உத்தரவாதத்தை அவை வழங்குகின்றன.

Shake3-box model ஸ்பீக்கர்களும் அன்றாட ஓடியோ தேவைகள் மற்றும் வார இறுதியில் வீடுகளில் இடம்பெறுகின்ற கேளிக்கை விருந்து நிகழ்வுகளுக்கான ஸ்டீரியோ இசையை வழங்குவதுடன், அதன் அதிக வலு கொண்ட ஒலிபெருக்கி, மகத்தான மட்டத்தில் இசை அழுத்தத்தை வெளிக்கொணருகின்றது. CD, DVD, HDMI OUT (ARC), USB, Bluetooth மற்றும் ஒலி வாங்கி அல்லது கிட்டார் வாத்தியக் கருவியுடனான இணைப்பு போன்ற எந்த மூலத்தின் வழியாகவும் இசையை ஒலிக்கச் செய்ய முடியும். Bluetooth மற்றும் Party King mode மூலம் Wireless Party Chain பாவனையாளர்கள் இசையை அனுபவித்து மகிழ முடியும்.

இவற்றை விட, சந்தையில் மற்றுமொரு புதிய உற்பத்தியையும் சிங்கர் மற்றும் Sony நிறுவனங்கள் ஒன்றிணைந்து அறிமுகப்படுத்தியுள்ளன. புதிய SRS-XB41, SRS-XB31, மற்றும் SRS-XB21EXTRA BASS ஆகிய கம்பியில்லா (வயர்லெஸ்) ஸ்பீக்கர்கள் அவற்றில் அடங்கியுள்ளன. live music mode, “Party Booster” feature, multi color line lights, speaker lights மற்றும் flashing strobe lights போன்ற களிப்பூட்டும் தொழில்நுட்ப சிறப்பம்சங்களுடன் கேளிக்கை விருந்து நிகழ்வுகளுக்கு மிகச் சிறந்த ஓடியோ சாதனங்களாக இந்த ஸ்பீக்கர்கள் காணப்படுகின்றன. Bluetooth ஊடாக கம்பியில்லா தொடரை (Wireless Party Chain) தோற்றுவிப்பதற்கு 100 ஸ்பீக்கர் வரையில் இச்சாதனத்துடன் இணைக்கப்பட முடியும். deep bass மற்றும் punch bass ஆகியவற்றைப் பேணுவதை இலக்காகக் கொண்டு ஸ்பீக்கர்களின் இசைத் தரம் வடிவமைப்புச் செய்யப்பட்டுள்ளதுடன், EDM, grime மற்றும் hip-hop போன்ற பிரபலமான இசை வடிவங்களுக்கு உரத்த bass இசை வெளிப்பாடுகளை நேர்த்தியாகத் தருகின்றன.

ஒரு பொக்ஸ் வடிவத்திலான உயர் வலு கொண்ட ஹோம் ஓடியோ சிஸ்டம்கள் கொண்டுள்ள ஒருங்கிணைக்கப்பட்ட பரப்பு ஒலி பிறப்பாக்கி வலுவான இசையை வெளிக்கொணருகின்றது. MHC-V81DMdJ 360˚ LIVE SOUND தொழில்நுட்ப சிறப்பம்சத்தைக் கொண்டுள்ளதுடன், MHC-V71D ஆனது உயர் தர இசை வெளிப்பாட்டிற்காக LIVE SOUND தொழில்நுட்ப சிறப்பம்சத்தைக் கொண்டுள்ளது. இந்த இரு வடிவங்களும் மிகவும் நேர்த்தியான கேளிக்கை விருந்து சூழலைத் தோற்றுவிப்பதற்கு அறையை அலங்கரிக்கும் 360˚பிரகாசமான கேளிக்கை விருந்து வெளிச்ச அலங்காரங்களைக் கொண்டுள்ளன. மேலும், புதிய கிட்டார் இசை வாத்தியக் கருவியை இணைக்கும் வசதியானது தொழில்சார் கிட்டார் வாத்திய ஒலிபெருக்கியின் உபயோகத்துடன் கிட்டார் இசை விளைவுகளைத் தோற்றுவிக்கும் புரட்சிகரமான ஆற்றலைக் கொண்டுள்ளது. இசையைத் திறமையாகக் கையாளும் கட்டுப்பாட்டை தம் கைகளில் எடுத்து, தாங்களும் ஒரு னுது கலைஞராக மாறும் வாய்ப்பினை பாவனையாளர்கள் கொண்டுள்ளதுடன், புதிய TAIKO முழு வடிவமானது டிரம் வாத்தியத்தைப் போல உயர் வலு கொண்ட ஓடியோ one-box சிஸ்டத்தை அவர்கள் பயன்படுத்தவும் இடமளிக்கின்றது.

சிங்கர் ஸ்ரீலங்கா பீஎல்சி நிறுவனத்தின் குழும பிரதம நிறைவேற்று அதிகாரியான அசோக பீரிஸ் அவர்கள் நிகழ்வில் உரையாற்றுகையில்,´Sony உடன் இணைந்து நாம் அறிமுகப்படுத்தும் இப்புதிய உற்பத்தியின் மூலமாக சிங்கர் நிறுவனமானது உற்பத்திகள், சேவை மற்றும் அனுபவம் ஆகியவற்றைப் பொறுத்தவரையில் மிகச் சிறந்தவற்றை வெளிக்கொணர்ந்துள்ளது. வலுவான, உயர் தரம் கொண்ட இசையை வழங்கும் வியத்தகு ஹோம் ஓடியோ சிஸ்டம்களுக்காக ளுழலெ உலகளவில் பிரசித்தி பெற்றுள்ளது. இந்த 6 வடிவங்களும் பெறுமதிவாய்ந்த எமது வாடிக்கையாளர்களுக்கு அவர்களது வீடுகளை அதிர வைக்கும் இசையால் நிரப்புவதற்கு உயர் தர இசையை வழங்கும் மகத்தான சௌகரியத்தை அளிக்கின்றது. உங்களது வீட்டின் வரவேற்பறையை இசையால் அலங்கரித்து, நேர்த்தியான கேளிக்கை விருந்து சூழலைத் தோற்றுவிக்க உதவுகின்ற பல்வேறு நவீன இடைத்தொடர்பாடல் சிறப்பம்சங்களை இந்த சாதனங்கள் கொண்டுள்ளன,´ என்று குறிப்பிட்டார்.

கேளிக்கை விருந்தில் கலந்துகொள்ளும் அனைவரையும் உள்ளீர்க்கும் வகையில் தனித்துவமான இடைத்தொடர்பாடல் தொழில்நுட்ப சிறப்பம்சங்களை MHC-V81D, MHC-V71D,MHC-V41D மற்றும் MHC - V21D ஆகியன வழங்குகின்றன. "Party King" சிறப்பம்சமானது கேளிக்கை விருந்து தொடர்பில் பாவனையாளரின் சமூக ஊடக வலைத்தளங்கள் மூலமாக அறிந்து கொள்வதற்கு இடமளிப்பதுடன், அதனுடன் இணைந்த “Fiestable” மூலமாக பாவனையாளர் புதிய பதிவு பட்டன் மூலமாக இந்த ஹோம் ஓடியோ சிஸ்டம்களை இலகுவாக காண்பிக்கவும் முடியும். "Wireless Party Chain via Bluetooth" மூலமாக இந்த சிஸ்டம்கள் இசையையும், நண்பர்களையும் ஒன்றிணைப்பதுடன், இதன் மூலமாக 50 வரையான இசைவாக்க சிஸ்டம்களை இணைத்துக் கொள்ளவும் முடிகின்றது. கேளிக்கை விருந்தில் கலந்துகொள்ளும் பலரும் தமக்குப் பிடித்தமான பாடலை இலகுவாக ஒலிபரப்புவதற்கு இடமளிக்கும் வகையில் ஸ்பீக்கருடன் பல ஸ்மார்ட்போன்களை இணைக்கும் வசதியின் மூலமாக DJ இன் கட்டுப்பாட்டை ஏனையவர்களும் பெற்றுக்கொள்ளும் வகையில் ஒன்றுக்கு மேற்பட்ட சாதனங்களின் இணைப்பினை பாவனையாளர்கள் கொண்டிருக்க முடியும்.

Sony International (Singapore) Ltd நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி அலுவலகத்தின் கிளைத் தலைமை அதிகாரியான ஜஸ்டின் வோங் அவர்கள் உரையாற்றுகையில்,´எமது வாடிக்கையாளர்களுக்கு வியக்கவைக்கும் இப்புதிய உற்பத்திகளை வழங்குவதையிட்டு நாம் மிகுந்த பூரிப்படைந்துள்ளோம். இந்த உற்பத்தி வரிசையானது எமது வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் என நாம் நம்புகின்றோம். குறிப்பாக, ஓடியோ சாதனங்களின் கொள்வனவைப் பொறுத்தவரையில் இலங்கை மக்கள் அறிவுபூர்வமான தெரிவை மேற்கொள்ளும் மனப்பாங்கினை வெளிப்படுத்தியுள்ள நிலையில், Sony வழங்கும் இந்த உற்பத்தி வரிசை அவர்களது திருப்திக்கு உத்தரவாதமளிக்கும்,´ என்று குறிப்பிட்டார்.

ஹெட்போன்கள் (headphones), கம்பியில்லா ஸ்பீக்கர்கள் (wireless speakers), எம்பி3 பிளேயர்கள் (mp3 players), உயர்-பிரிதிறன் ஓடியோ (high-resolution audio), ஓடியோ சிஸ்டம் (audio systems), டிஜிட்டல் ஒலிப் பதிவாக்கிகள் (digital voice recorders), boomboxes வானொலிகள் (radios), எடுத்துச்செல்லக் கூடிய சீடி பிளேயர்கள் (portable CD players), ஹோம் தியேட்டர் சிஸ்டம் (home theatre systems) மற்றும் உப சாதனங்கள் அடங்கலாக பல வகைப்பட்ட Sony ஓடியோ உற்பத்திகளை சிங்கர் ஸ்ரீலங்கா வழங்கி வருகின்றது. Sony ஓடியோ உற்பத்திகள் அனைத்திற்கும் சிங்கர் வழங்கும் ஒரு வருட கால உத்தரவாதம் கிடைப்பதுடன், நாடளாவியரீதியிலுள்ள சிங்கர் ப்ளஸ், சிங்கர் மெகா, சிசில் வேர்ல்ட் மற்றும் முகவர்கள் மூலமாக அவை கிடைக்கப்பெறுகின்றன.

நாடளாவிய ரீதியிலுள்ள 420 இற்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை மையங்கள் மற்றும் 600 முகவர்களுடன் வியாபித்துள்ள மிகவும் பாரிய விநியோக வலையமைப்பு மற்றும் அதற்கு ஈடாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள விற்பனைக்குப் பின்னரான பேணற்சேவை வலையமைப்பு மூலமாக தனது வாடிக்கையாளர்களுடன் தனது இடைத்தொடர்பாடல்களை சிங்கர் ஸ்ரீலங்கா பீஎல்சி நிறுவனம் பேணி வருகின்றது. வாடிக்கையாளர்கள் கொள்வனவுகளை மேற்கொள்கின்ற சமயங்களில் அவர்களுக்கு மகத்தான அளவில் நெகிழ்வுப்போக்கினை வழங்கும் வகையில், வட்டியில்லா கொடுப்பனவுத் திட்டங்கள், விசேட தள்ளுபடிகள், பழையவற்றை ஒப்படைத்து புதியவற்றை கொள்வனவு செய்யும் திட்டங்கள், இலவச சலுகைகள் மற்றும் கடனட்டை சலுகைகள் ஆகியவற்றை சிங்கர் வழங்கி வருகின்றது. இத்தகைய முயற்சிகளுக்காக எண்ணற்ற விருதுகளை நிறுவனம் வென்றுள்ளதுடன், அவை எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற் போல், தொடர்ந்து பன்னிரண்டு ஆண்டுகளாக நாட்டில் மக்களின் அபிமானத்தை வென்ற வர்த்தகநாமமாக சிங்கர் முதலிடத்தில் திகழ்ந்து வருகின்றது.

நுகர்வோர் மற்றும் தொழில்சார் சந்தைகளில் ஓடியோ, வீடியோ, கேம் (விளையாட்டு), தொடர்பாடல்கள், முதன்மை (மநல) சாதனம் மற்றும் தகவல் தொழில்நுட்ப உற்பத்திகளை உற்பத்தி செய்து வழங்குவதில் முன்னிலை வகிக்கும் ஒரு நிறுவனமாக Sony Corporation திகழ்ந்து வருகின்றது. இசை, படங்கள் மற்றும் கணினிப் பொழுதுபோக்கு, இணைய வர்த்தகங்களுடன் உலகிலேயே இலத்திரனியல் மற்றும் பொழுதுபோக்கு துறைகளில் முன்னிலை வகிக்கின்ற என்று ஒரு தனித்துவமான ஸ்தானத்தை Sony கொண்டுள்ளது. 2018 மார்ச் 31 ஆம் திகதியில் முடிவடைந்த நிதியாண்டில் அண்ணளவாக 77 பில்லியன் அமெரிக்க டொலர் என்ற திரட்டிய வருடாந்த விற்பனையை Sony பதிவாக்கியுள்ளது.

Most Viewed