Back to Top

குளவி கொட்டுக்கு இலக்காகி 28 மாணவர்கள் வைத்தியசாலையில்

குளவி கொட்டுக்கு இலக்காகி 28 மாணவர்கள் வைத்தியசாலையில்

September 14, 2018  02:11 pm

Bookmark and Share
மஸ்கெலியா சமன்எலிய வித்தியாலய மாணவர்கள் 28 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட இப்பாடசாலை மாணவர்கள் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று (14) மதியம் 12 மணி அளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கபடுகிறது.

பாடசாலை மாணவர்களுக்கு இடைவேளை வழங்கபட்ட கால பகுதியில் பாடசாலையின் மைதானத்தில் விளையாடி கொண்டிருந்த வேளையில் பாடசாலை வாளாகத்தில் இருந்த குளவிகள் மாணவர்களை தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த குளவி தாக்குதலில் தரம் 06, 07, 08 ஐ சேர்ந்த மாணவர்கள் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

இதேவேளை ஹட்டன் வலய கல்வி பணிமனையின் பணிப்பாளர் பி. ஸ்ரீதரனின் வேண்டுகோளுக்கு இணங்க, சமனலிய பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குளவி கொட்டுக்கு இலக்கான 28 மாணவர்களும் தொடர்ந்தும் மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்பட்டுள்ளதாகவும் இவர்கள் குறித்து கவலையடைய தேவையில்லை எனவும் வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

(மலையக நிருபர் சதீஸ்குமார்)