Back to Top

 பஸ் ஒன்றில் பெண்ணின் சடலம்

பஸ் ஒன்றில் பெண்ணின் சடலம்

September 15, 2018  04:48 pm

Bookmark and Share
கம்பஹா, உடுகம்பொல, கெஹெல்பத்தார பிரதேசத்தில் தீப்பற்றிய பஸ் ஒன்றில் இருந்து, தீயில் கருகிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இன்று (15) அதிகாலை வீடொன்றின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் ஒன்று தீப்பற்றி எரிவதாக 119 அவசர இலக்கத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி ஸ்தலத்துக்கு சென்ற பொலிஸார் சாரதியின் இருக்கைக்கு அருகில் இருந்து குறித்த சடலத்தை கண்டெடுத்துள்ளனர்.

உடுகம்பொல பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பெண் பஸ் உரிமையாளரின் மனைவி என, விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், கம்பஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.