Back to Top

மோட்டார் சைக்கிளுடன் மோதி ஒருவர் பலி

மோட்டார் சைக்கிளுடன் மோதி ஒருவர் பலி

September 16, 2018  09:55 am

Bookmark and Share
கொழும்பு - கண்டி பிரதான வீதியின் கேகாலை, கொப்போவல பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் பலத்த காயமடைந்த நபர் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கலிகமுவ பகுதியை சேர்ந்த 81 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.