Back to Top

கோர விபத்து - நால்வர் பலி - இருவர் படுகாயம்

கோர விபத்து - நால்வர் பலி - இருவர் படுகாயம்

September 16, 2018  11:45 am

Bookmark and Share
வவுனியா, ஓமந்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து மாத்தறை நோக்கிய பயணித்த கடுகதி புகையிரதத்தில் கார் ஒன்று மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களும் மற்றும் காயமடைந்தவர்களையும் வவுனியா வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை 10.30 மணியளவில் பாதுகாப்பற்ற புகையிரத கடவை ஒன்றில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றார்.

சம்பவம் தொடர்பில் ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.