Back to Top

விமான பயணத்தில் காலதாமதம்

விமான பயணத்தில் காலதாமதம்

September 16, 2018  04:18 pm

Bookmark and Share
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து குவங்ஜூ நோக்கி பயணிக்க இருக்கும் UL880 என்ற விமான பயணத்தில் 11 மணிநேர காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சூறாவளி நிலமை காரணமாக குவங்ஜூ விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள காரணத்தினாலேயே இவ்வாறு காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மீண்டும் குறித்த விமானம் நாளை (17) அதிகாலை குவங்ஜூ நோக்கி பயணிக்க இருப்பதாகவும் குவங்ஜூ விமான நிலையத்தின் நிலமையின் அடிப்படையில் மேலும் தாமதம் ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.