Back to Top

விபத்தில் இருவர் பலி - ஒருவர் வைத்தியசாலையில்

விபத்தில் இருவர் பலி - ஒருவர் வைத்தியசாலையில்

September 16, 2018  10:36 pm

Bookmark and Share
ஹட்டன் – மல்லியப்பு சந்தியில் இன்று (16) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

விபத்தில் காயமடைந்துள்ள நபர் மேலதிக சிகிச்சைகளுக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் இருந்து கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தலவாகலையிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பேருந்தொன்றும், ஹட்டனிலிருந்து கொட்டகலை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியொன்றுமே நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் முச்சக்கரவண்டியில் சென்ற இருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதிக வேகம் காரணமாக இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த விபத்து தொடர்பில் தனியார் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(மலையக நிருபர்கள் சதீஸ்குமார், கிரிஷாந்தன்)