Back to Top

 ரொனால்டோ மீதான பாலியல் வழக்கு மீண்டும் விசாரணை

ரொனால்டோ மீதான பாலியல் வழக்கு மீண்டும் விசாரணை

October 5, 2018  10:12 am

Bookmark and Share
போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (வயது 33). இவர் மீது கடந்த 2009 ஆம் ஆண்டு 25 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் புகார் கூறினார்.

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் வைத்து ரொனால்டோ, தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அந்த பெண் கூறியதாக பி.பி.சி. நிறுவனம் செய்தி வெளியிட்டது.

இது தொடர்பாக அமெரிக்க பொலிஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், ரொனால்டோவும், அந்த இளம்பெண்ணும் இந்த பிரச்சினையை நீதிமன்றத்துக்கு வெளியே சுமுகமாக பேச்சுவார்த்தை மூலம் முடித்துக்கொள்வது என கடந்த 2010 ஆம் ஆண்டு முடிவு செய்தனர்.

இதற்காக அந்த பெண்ணுக்கு, ரொனால்டோ 3,75,000 டொலர் (2½ கோடி) இழப்பீடு வழங்குவது என ஒப்பந்தம் போடப்பட்டது.

ஆனால் இந்த பிரச்சினை தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ரொனால்டோ மீதான பாலியல் புகாரை நீதிமன்றத்துக்கு வெளியே தீர்த்துக்கொள்வது என போடப்பட்ட ஒப்பந்தம் செல்லாது என அறிவிக்கக்கோரி, அந்த பெண்ணின் வழக்கறிஞர்கள் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.

இதைத் தொடர்ந்து ரொனால்டோ மீதான பாலியல் புகார் மீது அமெரிக்க பொலிஸார் மீண்டும் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

Most Viewed