
பொலிஸாரின் திடீர் சோதனையின் போது 15 பேர் கைது
October 10, 2018 12:30 pm
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசங்களில் நள்ளிரவில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்திய 12 பேரையும், வெல்லாவெளி பிரதேசத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 3 பேர் உட்பட 15 பேரை நேற்று (09) கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட உதவி பொலிஸ் மா அதிபரின் கீழ் விசேட பொலிஸ் பிரிவு நேற்று நள்ளிரவு மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசங்களில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது நள்ளிரவில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 5 பேரையும் மதுபோதையில் வாகனம் செலுத்திய 6 பேர் மற்றும் நீதிமன்ற பிடிவிறந்து பிறப்பிக்கபட்ட ஒருவர் உட்பட 12 பேரை கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 3 பேரை கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அம்பாறை நிருபர் சரவணன்)