Back to Top

Cash Bonanza Carnival மற்றும் Mega Cash Bonanza இசை நிகழ்ச்சி

Cash Bonanza Carnival மற்றும் Mega Cash Bonanza இசை நிகழ்ச்சி

October 10, 2018  04:19 pm

Bookmark and Share
யாழ் வீரசிங்கம் மண்டபத்திற்கு எதிரே திறந்த வெளி அரங்கில் 29ம் திகதி செப்ரம்பர் 2018 அன்று மொபிடெல்லின் பெரும் எதிர்பார்க்கப்பட்ட Cash Bonanza கொண்டாட்டம் நடைபெற்றது. திருவிழா சூழலை புதிய தளத்திற்கு கொண்டு சென்று, இந்தியாவில் இருந்து பாடகர்களை அழைத்து வந்து பெரும் எண்ணிக்கையிலான மக்களையும் ஈர்த்தது. குறித்த தினத்தில் அனைத்து வீதிகளும் மொபிடெல் Cash Bonanza மக்களை அழைத்து வந்தது. வருடம் முழுவதிலும், நாடெங்கிலும் உள்ள பெரும் மக்கள் தொகையை ஈர்க்கும் வாடிக்கையாளர் விருதுகள் வழங்கும் Cash Bonanza நிகழ்வின் ஒரு அங்கமாக இந்த திருவிழா ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. குடும்பங்களுக்கு உண்மையான கொண்டாட்டமாக இது அமைந்திருந்ததுடன், மொபிடெல்லின் ´நாம் எப்போதும் அக்கறை செலுத்துவோம்´ என்ற நிறுவன வாசகத்திற்கு இசைவானதாக இருந்தது.

அனைத்து வயதுப் பிரிவினையும் சேர்ந்தவர்களுக்கான நிகழ்வு என்ற வகையில், ஓவியப் போட்டி மற்றும் பங்கி ஜம்பிங் என்பவற்றையும், பெருமளவிலான இளைஞர்களை கவர்ந்த 4 ஜி விளையாட்டு வலயத்தையும் உள்ளடக்கியிருந்தது. சிறுவர்களுக்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் பெருமளவிலான சிறுவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மாலைப் பொழுதின் பிரதான அங்கமாக, இந்தியாவின் மிகச் சிறந்த பாடகர்களான சத்ய பிரகாஷ், ரீட்டா ஆகியோர் வருகை தந்திருந்தனர். உள்ளூர் பாடகர்களான நவகம்புர கணேஷ், சமீரா ஹசன், ரகுனந்தன் மற்றும் ஸ்டான்லி ஆகியோருடன் இணைந்து மக்களை கவரும் வகையில் மிகச்சிறந்த இசை நிகழ்ச்சியை அவர்கள் வழங்கியிருந்தனர். சீதுவ சக்குரா மற்றும் சாரங்கா போன்ற இசைக்குழுக்களும் மக்களை பல மணித்தியாலங்கள் மகிழ்வாக வைத்திருந்தனர். மக்களின் வாழ்க்கையை நேர்நிலையாக தாக்கம் செலுத்தும் வகையில், தேசிய கைபேசி வழங்குனரான மொபிடெல்லானது, தமது வாடிக்கையாளர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் ஒன்றினை பிரபல கண் வைத்திய நிபுணர்களுடன் இணைந்து ஒழுங்கு செய்திருந்தது. மூத்த பிரஜைகளுக்கு ஆயிரம் மூக்குக் கண்ணாடிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

நாளாந்த மற்றும் காலாண்டு குலுக்கல்கள் ஊடாக, வருடம் முழவதிலும் ரூ. 211 மில்லியன் பெறுமதியான நேர்மையான மற்றும் அதிஷ்ட மொபிடெல் வாடிக்கையாளர்களுக்கு மெர்சிடஷ் பென்ஷ் கார் மற்றும் பல்வேறு விருதுகளையும் 2018ம் ஆண்டு Cash Bonanza வழங்குகின்றது. 220,000 நாளாந்த வெற்றியாளர்கள் ரூ. 500 வரை வருடம் முழுவதும் நாளாந்தம் பணப் பரிசுகளை வெல்வர். 2016 மற்றும் 2017 காலப்பகுதியில் 24 மொன்டெரோ ஜீப்களை வழங்கி கைபேசி தொலைத்தொடர்பு துறையில் முதலாவது சேவை வழங்குனராக மொபிடெல் உள்ளது. அதன் தொடர்ச்சியாக இவ்வருடம் மெர்சிடெஷ் பென்ஸ் காரினை வழங்கவுள்ளது.

மொபிடெல் வாடிக்கையாளர்களுக்கான மீள்நிரப்பல், கட்டண கொடுப்பனவு பிரசாரமாக Cash Bonanza உள்ளது. மொபிடெல் முற்கொடுப்பனவு, பிற்கொடுப்பனவு மற்றும் புரோட்பேன்ட் வாடிக்கையாளர்கள் மொபிடெல் Cash Bonanza குலுக்களுக்கு தகுதி பெறுவர். ரூ. 50 பெறுமதியான ஒவ்வொரு கொடுப்பனவுக்கும் அவர்கள் தகுதி பெறுவர். பிரத்தியேகமான பதிவுச் செயற்பாடு எதுவும் இல்லை. ஆனால் அனைத்து மொபிடெல் வாடிக்கையாளர்களும் இயல்பாகவே இந்த குலுக்கலுக்கு தகுதி பெறுவர். நாளாந்த பணப் பரிசுகளுக்கு பேசும் நேரம் மற்றும் பயன்படுத்தும் டேட்டாவின் அளவிற்கும், பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்கள் அவர்கள் செலுத்தும் கட்டணத்திற்கு ஏற்பவும் பரிசுகளைப் பெறுவர்.

071 2755 777 என்ற மொபிடெல் வாடிக்கையாளர் சேவை ஹொட்லைன் ஊடாக மற்றும் தபால் மூலமாக Cash Bonanza வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவர். தாம் வென்ற பரிசுகளுக்காக மேலதிக கட்டணம் எதுவும் வாடிக்கையாளர்களிடம் இருந்து அறவிடப்படாது.