Back to Top

ஐஓசி நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரித்தது

ஐஓசி நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரித்தது

October 11, 2018  06:45 am

Bookmark and Share
நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் (ஐஓசி) தெரிவித்துள்ளது.

புதிய எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கமைவாக இலங்கை பெற்றோலியக் கூட்டத்தாபனம் எரிபொருட்களின் விலைகளை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிப்பதாக நிதியமைச்சு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் ஐஓசி நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரிப்பதாக தெரிவித்துள்ளது.

அதன்படி 92 ஒக்டைன் பெற்றோல் 155 ரூபாவாகவும் 95 ஒக்டைன் பெற்றோல் 172 ரூபாவாகவும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, டீசல் 129 ரூபாவாகவும், சுப்பர் டீசல் 141 ரூபாவாகவும் அதிகரிக்கப்படுவதாகவும் ஐஓசி தெரிவித்துள்ளது.

Most Viewed