Back to Top

மெர்சடஸ் பென்ஸ் வாகனத்துடன் தரமுயர்த்தப்பட்டுள்ள செலிங்கோ லைஃப் பிரசாரப் பிரிவு

மெர்சடஸ் பென்ஸ் வாகனத்துடன் தரமுயர்த்தப்பட்டுள்ள செலிங்கோ லைஃப் பிரசாரப் பிரிவு

October 11, 2018  10:48 am

Bookmark and Share
செலிங்கோ லைஃப்பின் பிரசாரப்பிரிவின் வாகன அணி இரண்டு புதிய மெர்சடஸ் பென்ஸ் விடோ வாகனங்களுடன் தரமுயர்த்தப்பட்டுள்ளது.

நவீன பாணியோடும் வசதிகளோடும் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த முறையில் சேவைகளை வழங்கக் கூடிய வகையில் இது அமைந்துள்ளது.

நாட்டின் சகல பாகங்களுக்கும் விஜயம் செய்து கம்பனியின் இலக்கான ஆயுள் காப்புறுதியின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தவதில் மற்றும் ஆயுள் காப்புறுதி பற்றிய செய்தியை முக்கியத்துவத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதில் இந்தப் பிரிவு பிரதான பங்கு வகிக்கின்றது.

நகர்ப்புற நிகழ்ச்சிகள், ஆள்சேர்ப்பு நிகழ்ச்சிகள் மற்றும் வாடிக்கையாளர் அறிவூட்டல் திட்டங்கள் என்பனவற்றை இந்தப் பிரிவு மேற்கொள்கின்றது.

கம்பனியின் கூட்டாண்மை சமூகப் பொறுப்புத் திட்டங்களில் ஒன்றான இலங்கையின் பின்தங்கிய நகரப் பகுதிகளில் வைத்திய நிகழ்ச்சித் திட்டங்களையும் இந்தப் பிரிவு நடத்துகின்றது. இந்தப் பிரிவு அதன் பணியை சிறப்பாகப் பூர்த்தி செய்யும் வகையில் சிறப்பு ஒலியமைப்பும் இந்த வாகனங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.