Back to Top

இப்பாகமுவயில் 263வது கிளையைத் திறந்துள்ள கொமர்ஷல் வங்கி

இப்பாகமுவயில் 263வது கிளையைத் திறந்துள்ள கொமர்ஷல் வங்கி

October 11, 2018  10:54 am

Bookmark and Share
குருணாகல் மாவட்டத்தில் தனது நிலையை மேலும் ஸ்திரப்படுத்தும் வகையில் கொமர்ஷல் வங்கி தனது 263வது கிளையைத் திறந்து வைத்துள்ளது.

முழுமையான வசதிகளைக் கொண்ட இந்தக் கிளை இப்பாகமுவ எச்.எம்.எஸ். கட்டிடத்தில் அமைந்துள்ளது. வார நாட்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலும் இக்கிளை வங்கிச் சேவைகளுக்காக திறந்திருக்கும்.

வருடம் 365 நாளும் 24 மணிநேர சேவையை வழங்கக் கூடிய தன்னியக்க வங்கிச் சேவை வசதி கொண்டதாக இக் கிளை அமைந்துள்ளது என வங்கி அறிவித்துள்ளது. காசோலை வைப்பு இயந்திரம், இணையவழி வங்கிப் பரிமாற்ற இயந்திரம்ரூபவ் ATM இயந்திரம், பண வைப்பு இயந்திரம் என்பன இங்கு அமைய பெற்றுள்ளன.

இங்கு நிறுவப்பட்டுள்ள ATM இயந்திரம் இலங்கையில் கொமர்ஷல் வங்கியின் 782வது இயந்திரமாகும்.

வங்கியின் தலைவர் தர்மா தீரசிங்க, முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்.ரெங்கநாதன், பிரதான செயற்பாட்டு அதிகாரி சனத் மனதுங்க மற்றும் வங்கியின் சிரேஷ்ட முகாமைத்துவ அதிகாரிகள் சகிதம் புதிய கிளையைத் திறந்து வைத்தார்.

Most Viewed