Back to Top

மொழி ஒரு தடையல்ல – In-chatஇல் உடனடியாக தகவல்களை மொழி பெயர்க்கலாம்

மொழி ஒரு தடையல்ல – In-chatஇல் உடனடியாக தகவல்களை மொழி பெயர்க்கலாம்

October 11, 2018  01:56 pm

Bookmark and Share
Viber ஒரு சர்வதேச app ஆகும். உலகின் எப்பகுதியிலிருந்தும் உங்கள் நண்பர்களுடன் இலகுவாக தொடர்பு கொள்ள முடியும் என்பதுடன், சமூகங்களுடன் எந்தவொரு மொழியிலும் இணைப்புகளையும் ஏற்படுத்திக் கொள்ளலாம். இதில் காணப்படும் முக்கிய பிரச்சினையாக, வேறு மொழிகளில் பதியப்படும் தகவல்களை நீங்கள் எவ்வாறு இலகுவாக புரிந்து கொள்வது என்பது அமைந்துள்ளது.

முன்னர் நீங்கள் செய்தி ஒன்றை உங்களுக்கு புரியாத மொழியில் பெற்றுக் கொண்டால்ரூபவ் அதை கொப்பி செய்து, மொழிபெயர்ப்பு app ஒன்றில் பேஸ்ட் செய்து அர்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டியிருந்தது. இதனூடாக செய்தியை புரிந்து கொண்டு பதிலளிப்பதற்கு நீண்ட நேரத்தை எடுத்ததுடன், நீண்ட செய்முறைகளையும் வழங்கியிருந்தது. இதன் போது உரையாடல் வேறு திசைக்கு மாறியிருக்கவும் கூடும், உரையாடலின் முக்கிய பகுதிகளை நீங்கள் தவறவிட்டிருக்கவும் கூடும்.

எந்தவொரு மொழியிலும் chat வசதியை சுமூகமானதாக கொண்டிருப்பதற்கு நாம் Viber இன் புதிய in- chat மொழிபெயர்ப்பு வசதியை அறிமுகம் செய்துள்ளோம்! இன்று முதல், Viber chat இல் உங்களுக்கு கிடைக்கும் எந்தவொரு செய்தியையும் உங்களால் உங்கள் மொழிக்கு மாற்றிக் கொள்ளலாம்.

எந்தவொரு உரையாடலையும் நீங்கள் தற்போது எந்தவொரு மொழியிலும் உடனடியாக மாற்றிக் கொள்ளலாம்.

உங்கள் Viber app இல் செய்திகள் சுயமாக மொழி பெயர்ப்பு செய்யக்கூடிய வகையில் மாற்றிக் கொள்ளலாம். வேறொரு மொழியில் உங்களுக்கு செய்தியை பார்வையிட வேண்டுமாயின், அதையும் இலகுவாக மாற்றிக் கொள்ளலாம்.

செய்தியை நீண்ட நேரம் அழுத்தியிருந்து, மொழியை தெரிவு செய்து, உங்கள் மொழிபெயர்ப்பை பூர்த்தி செய்து கொள்ளலாம். எந்தவொரு நேரத்திலும் மொழி பெயர்ப்பை மாற்றிக் கொள்ளலாம் என்பதுடன், settings இல் மொழியை விரும்பியவாறு மாற்றிக் கொள்ளலாம்.

நீங்கள் ஜப்பானைச் சேர்ந்த பார்சலோனா உதைப்பந்தாட்ட விளையாட்டுக் கழகத்தின் ரசிகர் ஒருவர் என எடுத்துக் கொண்டால், உங்களுக்கு பார்சலோனா உதைப்பந்தாட்ட விளையாட்டுக் கழகம் தொடர்பான உத்தியோகபூர்வ chat கள் அல்லது ரசிகர் சமூக உரையாடல்களை உங்கள் மொழியில் வாசிக்க வேண்டுமாயின் உதை தற்போது நிறைவேற்றிக் கொள்ள முடியும். மேலும், சமூகத்துடன் இணைந்து கொண்டு, Public Chat ஐ பின்பற்றி, செய்தி ஒன்றை தெரிவு செய்து அதை மொழி பெயர்த்துக் கொள்வதனூடாக நீங்களும் உரையாடலில் இணைந்து கொள்ளலாம்.

Viber இல் மொழி பெயர்ப்புகளுக்கு கூகுள் மொழிபெயர்ப்பு வசதியினால் வலுவூட்டப்படுகிறது.

இந்த உள்ளம்சம் உலகளாவிய ரீதியில் காணப்படும் Viber பாவனையாளர்களுக்கு வழங்கப்படுவதுடன், அன்ட்ரொயிட் தொலைபேசியில் முதலில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுடன், iPhone பாவனையாளர்களுக்கு விரைவில் அறிமுகம்செய்யப்படும்.