Back to Top

இலங்கையில் மாபெரும் விற்பனையைக் கண்டுள்ள Samsung Galaxy Note9

இலங்கையில் மாபெரும் விற்பனையைக் கண்டுள்ள Samsung Galaxy Note9

October 11, 2018  03:39 pm

Bookmark and Share
Samsung ஸ்ரீ லங்காவின் சமீபத்திய அதிவேக சாதனமாக Galaxy Note9 இலங்கையின் வாடிக்கையாளர்களிடமிருந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதற்கு முந்தைய வேர்ஷன் ஆன Galaxy Note 8 இன் விற்பனையை, அண்மையில் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட Galaxy Note9 விஞ்சிவிட்டது. கணிப்புக்களைத் தாண்டி Note9 இன் விற்பனையானது Note 8 இனை விட 200% அதிகமாக சாதனை படைத்தது.

Galaxy Note9 இன் ஓஷியன் ப்ளு நிறத்துக்கு அதிக கேள்வி காணப்படுகிறது. Galaxy Note9 இன் விற்பனையானது அடுத்த சில வாரங்களுக்கு நிலையாக இருக்குமென எதிர்ப்பார்க்கப்படுகிறது. இலங்கையினரால் மிகவும் விரும்பப்படும் smart phone brand ஆக Samsung விளங்குகிறது.

Samsung ஆனது ஏற்கனவே இலங்கையின் ஸ்மார்ட் ஃபோன் சந்தைப் பிரிவில் கட்டுப்படியான விலையிலுள்ள ஃபோன்களை ஓர் மூலைக்கு தள்ளியுள்ளது. இப்பொழுது மிகவும் உயர் Galaxy Note9 இற்கு மிகவும் சாதகமான பதில் கிடைத்துள்ளது. Samsung ஆனது மேலும் புதிய உற்பத்திகளில் தம்மை ஈடுபடுத்தியுள்ளது. அத்துடன் எதிர்வரும் காலங்களில் பல புதிய சாதனங்களை பல புதிய அம்சங்களுடன் வெளியிட காத்திருக்கிறது.

புதிய சக்தி வாய்ந்த Galaxy Note9 நவீன அம்சங்களையும் முன்னணி வன்பொருளையும் கலந்து தம்மகத்தே கொண்டுள்ளமை, சந்தையில் தற்போதுள்ள மிகச்சிறந்த சாதனமாக இதை மாற்றியுள்ளது. 2018ஆம் ஆண்டின் மிகவும் சக்தி வாய்ந்த ஸ்மார்ட் ஃபோன் என்ற வகையில் Galaxy Note9 பல சிறந்த அம்சங்களை கொண்டிருப்பதனால் உயர் smart phone பாவனையாளர்களுக்கு கட்டாயம் தேவைப்படும் ஒன்றாக இது கருதப்படுகிறது.

பல அம்சங்களை தம்மகத்தே கொண்டுள்ள, smart phone Galaxy Note9, Samsung இன் பல நவீன தலைமை அம்சங்களை தாராளமாக உள்ளடக்கியுள்ளது. இதில் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சமாக S Pen விளங்குகிறது. இது Note சீரிஸில் தனித்துவமிக்க அம்சமாக விளங்குவதுடன் புதிய Note9 இல் மிகவும் கவனமாக மேம்படுத்தப்பட்டுள்ளது. புதிய Note9 இல் புத்தம் புதிய அம்சங்களான Scene Optimizer, Flaw Detection மற்றும் மேம்பட்ட கமராவினை பெற AI இனை பயன்படுத்துகிறது. Galaxy Note9 ஆனது பல வழிகளில் சக்தி வாய்ந்ததொன்றாக திகழ்கிறது. இதன் 6.4 அங்குலங்களைக் கொண்ட ஸ்கிறீனானது கேம்கள் விளையாடுவதற்கும், திரைப்படங்கள் பார்ப்பதற்கும் மற்றும் மேலும் பல தேவைகளுக்கும் மிகவும் உகந்தது. இதன் Infinite Display wide Quad HD+ Super AMOLED ஸ்கிறீனானது கண்களுக்கு விருந்தளிக்கும். Note9 இன் அழகிய டிசைன் முன்னணி வகிக்கிறது.

இதன் விளிம்புகள் வரையான Display கைக்கு வசதியானது என்பதுடன் வளைவுகளையும் பார்ப்பதற்கு எல்லையற்றதாகவும் விளங்குகிறது. Note9 இன் பாவனையாளர்களுக்கு பட்டரி ஆயுட் காலம் மற்றும் சேமிப்பு ஸ்டோரேஜ் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. காரணம்ரூபவ் 4,000mAh பட்டரியை இது கொண்டுள்ளது. இதன் மூலம் முழு நாளும் வீடியோக்கள் ஸ்டிரீம் செய்யவும் வேறு பல தேவைகளுக்கும் நீண்ட நேர பாவனைக்கும் உகந்தது.