Back to Top

இந்து சமுத்திரம் ஒரு பொது மரபுரிமைச் சொத்தாகும்

இந்து சமுத்திரம் ஒரு பொது மரபுரிமைச் சொத்தாகும்

October 11, 2018  07:14 pm

Bookmark and Share
இந்து சமுத்திரம் ஒரு பொது மரபுரிமைச் சொத்தாகும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

உலகின் மூன்றில் இரண்டு பகுதி எண்ணைக் கப்பல்களும், மூன்றில் ஒரு பகுதி சரக்குக் கப்பல்களும் இந்து சமுத்திரத்தின் ஊடாக பயணிக்கின்றன.

இதன் பொருளாதார நன்மைகளை அடைந்து கொள்ள அனைவரும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென பிரதமர் வலியுறுத்தினார்.

அலரிமாளிகையில் இன்று ஆரம்பமான இந்து சமுத்திரம் தொடர்பான மாநாட்டில் பிரதமர் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

40 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டார்கள்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Most Viewed