Back to Top

நிலத்தை தோண்டியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

நிலத்தை தோண்டியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

October 11, 2018  09:54 pm

Bookmark and Share
யாழ்ப்பாணம், அச்சுவேலி பகுதியில் மின்சார கம்பம் நாட்டுவதற்காக நிலத்தை தோண்டிய போது எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அச்சுவேலி, பத்தமேனி சூசையப்பர் வீதியில் இலங்கை மின்சார சபையினர் மின் கம்பத்தை நாட்டுவதற்கு நிலத்தை தோண்டியுள்ளனர்.

இதன் போது நிலத்துக்குள் இருந்து கை, கால், மண்டையோடு என மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

இந் நிலையில் எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பாக அச்சுவேலி பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, இதனால் அப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள் எந்தக் காலப் பகுதியில் புதைக்கப்பட்டிருக்கலாம், இவை யாருடையனவாக இருக்குமென்ற சந்தேகங்களும் எழுப்பப்பட்டுள்ளன.

(யாழ். நிருபர் பிரதீபன்)