Back to Top

சட்டவிரோதமாக மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது

சட்டவிரோதமாக மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது

October 12, 2018  10:01 am

Bookmark and Share
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ இராணிகாடு மாவெளி வனபகுதியில் சட்டவிரோதமாக மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த ஆறுபேரில் நான்கு பேர் கைது செய்யபட்டுள்ளதாகவும் ஏனைய இரண்டு பேர் தப்பி ஓடியுள்ளதாகவும் விஷேட அதிரடி படையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று (11) இரவு வேளையில் இந்த சம்பவம் இடம் பெற்றதாக விஷேட அதிரடி படையினர் தெரிவித்துள்ளனர்.

தலவாக்கலை விஷேட அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய பொகவந்தலாவ, இராணிகாடு மாவெளி வனபகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர்கள் நீண்டகாலமாக குறித்த வனபகுதியில் சட்டவிரோதமாக மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும், சந்தேக நபர்களிடம் இருந்து மாணிக்க கல் அகழ்விற்கு பயன்படுத்தபட்ட உபகரணங்களை கைபற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர்களை பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும், கைது செய்யபட்ட சந்தேக நபர்கள் பொகவந்தலாவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் விஷேட அதிரடிபடையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்களை இன்று (12) ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலை படுத்துவதற்கான நடவடிக்கையினை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருவதோடு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

(மலையக நிருபர் சதீஸ்குமார்)

Most Viewed