Back to Top

கொம்பேங்க் கிரடிட் கார்ட் மீதி பதிவழிப்பு

கொம்பேங்க் கிரடிட் கார்ட் மீதி பதிவழிப்பு

October 12, 2018  10:55 am

Bookmark and Share
கொமர்ஷல் வங்கியின் அதிர்ஷ்டம் மிக்க கிரடிட் கார்ட் உரிமையாளர்கள் மத்தியில் புன்னகையை தவழச் செய்யும் செய்தி ஒன்றை வங்கி வெளியிட்டுள்ளது. ´கொம்பேங்க் கிரடிட் கார்ட் மீதி பதிவழிப்பு´ என்பதுதான் அந்தச் செய்தி. இந்தப் பிரசாரத்தின் மூலம் அடுத்த மூன்று காலத்தில் மேற்கொள்ளப்படும் கிரடிட் கார்ட் செலவு மீதிகளாக மொத்தம் 5.25 மில்லியன் ரூபா பதிவழிப்புச் செய்யப்படவுள்ளது.

இதற்கான தகுதியைப் பெறுவதற்கு வங்கியால் வழங்கப்படும் விஸா அல்லது மாஸ்டர் கிரடிட் கார்ட் வைத்திருப்பவர்கள் ஒரு மாத காலத்துக்குள் தங்களது கார்ட் வழியாக 25இ000 ரூபாவைச் செலவிட வேண்டும். அல்லது 25,000 ரூபாவின் மடங்கான தொகைகளை செலவிடும் போது அது மேலதிக வெற்றி வாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் என்று வங்கி அறிவித்துள்ளது.

100,000 ரூபா வரையான பட்டியல் பதிவழிப்பு அக்டோபர் முதல் டிசம்பர் வரை 10 தகுதியான கார்ட் உரிமையாளர்கள் மீது நிறைவேற்றப்படும். மேலதிகமாக இன்னும் தகுதியான 15 கார்ட் உரிமையாளர்களுக்கு இந்தப் பிரசார காலம் முடிவடையும் வரை ஒவ்வொரு மாதமும் 50,000 ரூபா பதிவழிக்கப்படும்.

மொத்தமாக கொமர்ஷல் வங்கி கிரடிட் கார்ட் வைத்திருக்கும் 75 பேர் மாதாந்தம் குறைந்த பட்சம் 25,000 ரூபாவை செலவிடும் பட்சத்தில் இந்த வருட முடிவுக்குள் தங்களது கடன் மீதியில் இருந்து 100,000 ரூபாவை நீக்கிக் கொள்வதற்கான வாய்ப்பை பெறுவர்.

´கொமர்ஷல் வங்கி எப்போதுமே அதன் கார்ட் உரிமையாளர்களுக்கு மிகச் சிறந்த சாதகமான சேவைகளை வழங்க உறுதி பூண்டுள்ளது. இந்த புதிய ஊக்குவிப்பு டிசம்பர் மாதத்தின் பொருள் கொள்வனவு பருவ காலத்தையும் உள்ளடக்கி இருப்பதால் இது மிகவும் அதிர்ஷ்டவசமான ஒன்றாகும். நாம் மூன்று மாத காலங்களில் மிகவும் வெற்றிகரமான டெபிட் கார்ட் ஊக்குவிப்பை மேற்கொண்டிருந்தோம். இப்போது எமது கிரடிட் கார்ட் வைத்திருப்பவர்களுக்கு உற்சாகமூட்ட நாம் முடிவு செய்துள்ளோம்´ என்று கூறினார் வங்கியின் கார்ட் மத்திய நிலையத் தலைவர் துஷித சுரவீர இந்த ஊக்குவிப்பின் மூலம் வங்கி பண்டிகை காலத்தை முன்கூட்டியே வழங்கி உள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

கொமர்ஷல் வங்கியின் கிரடிட் மற்றும் டெபிட் கார்ட்டுகள் வருடம் முழுவதும் பல்வேறு சேவைகளை உள்ளடக்கிய ஊக்குவிப்பை வழங்குகின்றது. தனது மெக்ஸ் லோயல்டி வெகுமதி திட்டத்தின் மூலம் கிரடிட் மற்றும் டெபிட் கார்ட் என இரு பிரிவுகளுக்கும் வெகுமதிகளை வழங்கிய முதலாவது வங்கி கொமர்ஷல் வங்கியாகும். ஊக்குவிப்பு கழிவுத் திட்டங்களை விரிவு படுத்துவிலும் இந்த வங்கி முன்னோடியாகத் திகழ்கின்றது. பாரம்பரியமாக இவை கிரடிட் கார்ட்டுகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தன.

கொமர்ஷல் வங்கி அட்டைகள் தான் இலங்கையில் பாவனையில் மிக வேகமான வளர்ச்சி கண்டு வரும் அட்டைகளாகும். விற்பனைப் புள்ளி பாவனையில் வங்கியின் கிரடிட் மற்றும் டெபிட் கார்ட்டுகள் தான் சந்தையில் தலைமை நிலையிலும் உள்ளன. வெள்ளி தங்கம் பிளேட்டினம் என பல பிரிவுகளில் விஸாரூபவ் மாஸ்டர் கார்ட், விஸா சிக்னேச்சர், வேர்ள்ட் மாஸ்டர் கார்ட் மற்றும் விஸா பிரீமியர் பிரிவில் விஸா இன்பினிட் கார்ட் என பல்வகை கார்ட்டுகளை வங்கி வழங்குகின்றது. இவை அனைத்தும் ´டெப் அன்ட் கோ´ NFC தொழில்நுட்பம் கொண்டவை. மிக உறுதியான NFC விற்பனைப் புள்ளி (POS)வலையமைப்பையும் இவை கொண்டுள்ளளன. மெக்ஸ் லோயல்டி வெகுமதித் திட்டம் தான் கிரடிட் மற்றும் டெபிட் கார்ட் ஆகிய இரண்டுக்கும் வெகுமதிகளை வழங்கும் ஒரே வாடிக்கையாளர் திட்டமாகும்.

தொடர்ந்து எட்டு வருடங்களாக உலகின் தலைசிறந்த ஆயிரம் வங்கிகள் வரிசையில் இடம் பெற்றுள்ள கொமர்ஷல் வங்கி நாடு முழுவதும் 263 கிளைகளுடனும், 782 ATM வலையமைப்புக்களுடனும் செயற்படுகின்றது. வங்கி 2016 மற்றும் 2017ம் ஆண்டு காலப்பகுதியில் 30க்கும் மேற்பட்ட உள்ளுர் மற்றும் சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. 2018ன் முதல் ஆறு மாத காலத்தில மட்டும்; 20 சர்வதேச விருதுகளையும் கொமர்ஷல் வங்கி பெற்றுள்ளது.

Most Viewed