Back to Top

nova 3i White Edition ஸ்மார்ட்போனை Huawei இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ளது

nova 3i White Edition ஸ்மார்ட்போனை Huawei இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ளது

October 12, 2018  11:43 am

Bookmark and Share
இலங்கையில் முதலிடத்தில் திகழும் ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான Huawei, 2018 ஜுலையில் தனது அதிநவீன மூன்றாம் தலைமுறை Nova சாதனமான ர்Huawei nova3 மற்றும் nova3i ஆகியவற்றை அறிமுகம் செய்து வைத்திருந்த நிலையில், இலங்கையில் விற்பனையில் சாதனை படைத்தவாறு மக்கள் மத்தியில் அதன் செல்வாக்கு பல்கிப் பெருகியுள்ளது. HUAWEI இன் அபிமானிகள் மத்தியிலிருந்து கிடைக்கப்பெற்ற அதிகரித்த அளவிலான வேண்டுகோளுக்கு இணங்க, மிக நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட Huawei nova3 White Limited Edition ஸ்மார்ட்போனை இலங்கையில் அறிமுகம் செய்துள்ளமை தொடர்பில் HUAWEI Sri Lanka நிறுவனம் அறிவித்துள்ளது.

Nova3 தற்சமயம் Iris Purple, சிவப்பு மற்றும் கறுப்பு ஆகிய நிறங்களில் கிடைக்கப்பெறுவதுடன், Nova3i ஆனது தற்போது Iris Purple மற்றும் கறுப்பு ஆகிய நிறங்களில் கிடைக்கப்பெறுகின்றது. ஒக்டோபர் 10 ஆம் திகதி முதல் இலங்கையிலுள்ள அனைத்து Huawei அனுபவ மையங்கள் மற்றும் சிங்கர் ஸ்ரீலங்கா விற்பனை காட்சியறைகள் மூலமாக Nova 3i White edition வடிவமும் தற்போது கிடைக்கப்பெறுகின்றது. Huawei nova3 இனை ரூபா 79,900 என்ற விலையிலும், Huawei nova3i இனை ரூபா 49,900 என்ற விலையிலும் பெற்றுக்கொள்ள முடியும்.

Nova 3 உற்பத்தி வரிசையானது மிகக் குறுகிய காலப்பகுதியில் சர்வதேச மற்றும் இலங்கை சந்தைகளில் மிகுந்த பிரபலமடைந்துள்ளது. இந்த உற்பத்தி வரிசையானது விற்பனையிலும் சாதனை படைத்துள்ளதுடன், அதன் அதிசிறந்த பெறுபேற்றுத்திறனுக்காக உள்நாட்டு தொழில்நுட்ப வீடியோ பதிவாளர்கள் (vloggers) மற்றும் ஆய்வாளர்கள் அடங்கலாக மிகச் சிறந்த வாடிக்கையாளர் கருத்துக்களையும் சம்பாதித்துள்ளது. Nova 3 உற்பத்தி வரிசை இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டு விற்பனைக்கு விடப்பட்ட முதலாவது தினத்திலேயே அது 2,000 அலகுகள் விற்பனை என்ற சாதனையைப் படைத்துள்ளதுடன், இலங்கையில் இந்த வர்த்தகநாமம் அறிமுகமாகிய பின்னர் அதன் பயணத்தில் ஒரு மைல்கல்லாகவும் மாறியுள்ளது.

பெறுபேற்றுத்திறனைப் பொறுத்த வரையில், HUAWEI nova 3i ஆனது Kirin 710 SoC இனால் வலுவூட்டப்பட்டுள்ளதுடன், ஏனைய பிரதான சாதனங்களுக்கு இணையான ஒரு அனுபவத்தை வழங்கும் வகையில், 4 GB வரையான RAM மற்றும் அதிநவீன EMUI 8.1 ஆகிய தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ளது. பயனாளர்களுக்கு சௌகரியத்தை வழங்கும் வகையில் 128GB ROM என்ற பாரிய memory ஆற்றலின் பக்கபலத்தையும் இச்சாதனம் கொண்டுள்ளது.

அதிசிறந்த புகைப்படவியல் ஆற்றல்களை வழங்கும் அதன் Quad AI camera (நான்கு செயற்கை நுண்ணறிவு கேமரா முறைமை) தொழில்நுட்பமானது Nova3 உற்பத்தி வரிசையின் மற்றுமொரு சிறப்பம்சாகும். இந்த தொழில்நுட்ப சிறப்பம்சங்களின் மூலமாக செல்ஃபி அனுபவம் மேம்படுத்தப்பட்டுள்ளது. f/2.0 wide aperture high resolution lens மற்றும் தொழில்சார் மட்டத்திலான வில்லைகள் (lens) ஆகியன DSLR மட்டத்திலான புகைப்பட தரத்தை வழங்குகின்றன. Nova3i ஆனது 16MP+2MP பின்புற கேமரா மற்றும் 24MP+2MP முன்புற கேமரா என நான்கு கேமராக்களைக் கொண்டுள்ளது.

2018 ஆம் ஆண்டிற்கான Fortune 500 தரப்படுத்தல் பட்டியலில் 72 ஆவது ஸ்தானத்தைப் பிடித்துள்ள HUAWEI, அண்மையில் Forbes வெளியிட்டுள்ள உலகின் மிகவும் பெறுமதிவாய்ந்த வர்த்தகநாமங்கள் பட்டியயில் 79 ஆவது ஸ்தானத்தைப் பிடித்துள்ளது. 2018 ஆம் ஆண்டிற்கான Interbrand மிகச் சிறந்த சர்வதேச வர்த்தகநாமங்கள் பட்டியலில் இது 68 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. BrandZ இன் முதல் 100 இடங்களில் திகழும் மிகவும் பெறுமதிவாய்ந்த சர்வதேச வர்த்தகநாமங்கள் பட்டியலில் இந்த வர்த்தகநாமம் 48 ஆவது இடத்தைப் பிடித்துள்ளதுடன், Brand Finance வெளியிட்டுள்ள உலகின் மிகவும் பெறுமதிவாய்ந்த 500 வர்த்தகநாமங்களின் பட்டியலில் 39 ஆவது ஸ்தானத்தையும் பிடித்துள்ளது. இலங்கையில் ஸ்மார்ட்போன் விற்பனையில் Huawei முதலாவது ஸ்தானத்தைப் பேணி வருவதுடன், GfK அறிக்கையின் பிரகாரம் 30% இற்கும் மேற்பட்ட வலுவான சந்தைப் பங்கினையும் கொண்டுள்ளது.

Most Viewed