Back to Top

புதையல் அகழ்வில் ஈடுபட்ட 12 பேர் கைது

புதையல் அகழ்வில் ஈடுபட்ட 12 பேர் கைது

October 12, 2018  02:08 pm

Bookmark and Share
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள திராய்மடு சவுக்கடிப் பிரதேசத்தில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட 12 பேரை நேற்று (11) இரவு கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து குறித்த பிரதேசத்தை சம்பவதினமான நேற்று இரவு சுற்றிவளைத்த​ போது புதையல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 12 பேரை கைது செய்துள்ளனர்.

மட்டக்களப்பு , நீர்கொழும்பு, சிலாபம், அக்குறனை போன்ற பிரதேசங்களை சேர்ந்த 12 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஸ்கானர் மற்றும் புதையல் அகழ்வுக்குப் பயன்படுத்திய பொருட்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

(அம்பாறை நிருபர் சரவணன்)