Back to Top

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் விஷேட கலந்துரையாடல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் விஷேட கலந்துரையாடல்

October 12, 2018  03:11 pm

Bookmark and Share
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஆராய்வதற்காக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் இன்று (12) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

தமது விடுதலையை வலியுறுத்தி 29 நாட்களாக தமிழ் அரசியல் கைதிகள் தொடர்ச்சியாக உணவு தவிர்ப்பு போராட்டத்தை நடாத்தி வருகின்றனர்.

இதனால் அவர்களின் உடல் நிலை மோசமாகியுள்ளதை தொடர்ந்து அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய அமைப்பு, நேற்று முதலமைச்சரை சந்தித்தது.

இதற்கமைய இன்றைய தினம் காலை 11 மணிக்கு முதலமைச்சர் அலுவலகத்தில் குறித்த கலந்துரையாடல் ஆரம்பமாகியுள்ளது.

இந்த கூட்டத்தில் பொது அமைப்புக்கள் மற்றும் முன்னாள் அரசியல் கைதிகள் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

(யாழ். நிருபர் பிரதீபன்)

Most Viewed