Back to Top

அம்பலாங்கொட தர்மாசோக கல்லூரிக்கு Affinity கார்ட் அறிமுகம்

அம்பலாங்கொட தர்மாசோக கல்லூரிக்கு Affinity கார்ட் அறிமுகம்

October 12, 2018  03:29 pm

Bookmark and Share
தென் மாகாணத்தின் முன்னணி பாடசாலைகளில் ஒன்றான அம்பலாங்கொட தர்மாசோக கல்லூரியின் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் கொமர்ஷல் வங்கியின் இணை வர்த்தக இலச்சினையுடன் கூடிய மாஸ்டர் கார்ட் மற்றும் கிரடிட் கார்ட் என்பனவற்றைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

தர்மாசோக கல்லூரியின் Affinity கார்ட், மாஸ்டர் கார்ட் பிளேட்டினம் மற்றும் கோல்ட் தரங்களில் வழங்கப்படவுள்ளன. இந்த கார்ட்டுகள் அதன் பாவனையாளர்களுக்கு பல நன்மைகளை அளிக்கவுள்ளன.

இந்தக் கார்ட் மூலமான எல்லாக் கொடுப்பனவுகளில் இருந்தும் ஒரு குறிப்பிட்ட விகிதம் கல்லூரியின் பழைய மாணவர் சங்க கணக்கில் வைப்பிலிடப்படும்.

இதற்கான இணைவுக் கட்டணங்கள் நீக்கப்படும், பணப்பரிமாற்றங்கள் தொடர்பான இலவச குறுந்தகவல் சேவைகள் வழங்கப்படும், இலவச இலத்திரனியல் வங்கி கூற்றுக்கள், இலவச இலத்திரனியல் பாஸ்புக் வசதிகள் என்பனவும் வழங்கப்படும்.

கார்ட் வைத்திருப்பவர்களுக்கு பருவ கால கழிவுகள், வருடச் சுற்றுக் கழிவுகள்ரூபவ் கொம்பேங்க் இலகு கொடுப்பனவு திட்டங்கள் என கொம்பேங்க் கார்ட்டுகள் வைத்துள்ள ஏனைய வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் சகல வசதிகளும் இந்த கார்ட்டுகளுக்கும் கிடைக்கும். மீதி பரிமாற்ற வசதி, கேஷ் ஒன் கார்ட் வசதி என்பனவும் இந்த கார்ட் வைத்திருப்பவர்களுக்கு கிடைக்கும்.

மேலதிகமாக கொமர்ஷல் வங்கியின் இந்த இணைப்பு கார்ட்டுகள் கொமர்ஷல் வங்கியின் மெக்ஸ் லோயல்டி வெகுமதி திட்டத்திலும் இணைத்துக் கொள்ளப்படும். இலங்கையில் டெபிட் மற்றும் கிரடிட் கார்ட்டுகள் என இருவகை கார்ட்டுகளுக்கும் வழங்கப்படும் ஒரே ஒரு வெகுமதித் திட்டம் இதுவேயாகும்.

கொமர்ஷல் வங்கி அட்டைகள் தான் இலங்கையில் பாவனையில் மிக வேகமான வளர்ச்சி கண்டு வரும் அட்டைகளாகும். விற்பனைப் புள்ளி பாவனையில் வங்கியின் கிரடிட் மற்றும் டெபிட் கார்ட்டுகள் தான் சந்தையில் தலைமை நிலையிலும் உள்ளன. வெள்ளி தங்கம் பிளேட்டினம் என பல பிரிவுகளில் விஸாரூபவ் மாஸ்டர் கார்ட், விஸா சிக்னேச்சர், வேர்ள்ட் மாஸ்டர் கார்ட் மற்றும் விஸா பிரீமியர் பிரிவில் விஸா இன்பினிட் கார்ட் என பல்வகை கார்ட்டுகளை வங்கி வழங்குகின்றது. இவை அனைத்தும் ´டெப் அன்ட் கோ´ NFC தொழில்நுட்பம் கொண்டவை. மிக உறுதியான NFC விற்பனைப் புள்ளி (POS) வலையமைப்பையும் இவை கொண்டுள்ளளன.

தொடர்ந்து எட்டு வருடங்களாக உலகின் தலைசிறந்த ஆயிரம் வங்கிகள் வரிசையில் இடம் பெற்றுள்ள கொமர்ஷல் வங்கி நாடு முழுவதும் 262 கிளைகளுடனும், 778 ATM வலையமைப்புக்களுடனும் செயற்படுகின்றது. வங்கி 2016 மற்றும் 2017ம் ஆண்டு காலப்பகுதியில் 30க்கும் மேற்பட்ட உள்ளுர் மற்றும் சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. 2018ன் முதல் எட்டு மாத காலத்தில மட்டும் 20 சர்வதேச விருதுகளையும் கொமர்ஷல் வங்கி பெற்றுள்ளது.

Most Viewed