Back to Top

விளையாட்டு உபகரணங்களுக்கான புத்தம் புதிய உலகம்

விளையாட்டு உபகரணங்களுக்கான புத்தம் புதிய உலகம்

October 12, 2018  03:49 pm

Bookmark and Share
இலங்கையர்களுக்கு விளையாட்டு உபகரணங்களுக்கான புத்தம் புதிய உலகை திறந்து வைக்கும் வகையில், புத்ததாச விளையாட்டு மைதானத்திற்கு பின்புறமாக பத்தரமுல்ல, 260/1 பன்னிபிட்டிய வீதியில் 13 ஒக்டோபர் 2018 அன்று தமது முதலாவது காட்சியறையை Decathlon ஆரம்பிக்கின்றது.

தனித்துவமான வாடிக்கையாளர் சேவையுடன் 50இற்கும் மேற்பட்ட விளையாட்டுகளுக்கான 2500 உற்பத்திகளை காட்சிப்படுத்தும் தனித்துவமான விளையாட்டு உபகரணங்கள் காட்சியறை அம்சத்துடன் Decathlon மிளிர்கின்றது. வாடிக்கையாளர்களும், விளையாட்டு ஆர்வலர்களும் சௌகரியமாக காட்சியறையில் நேரம் செலவிட்டு தமக்குத் தேவையானவற்றை தெரிவு செய்யும் வகையில் 1200 சதுரமீற்றர் பரப்பளவில் இந்த காட்சியறை அமைந்திருக்கின்றது. ஆரம்ப பயணர்கள் முதல், முன்னிலையில் உள்ளவர்கள் வரை அனைவரது தேவைகளையும் இந்த காட்சியறை பூர்த்தி செய்கின்றது.

தரமான விளையாட்டு உபகரணங்களை மாத்திரமன்றி, 500 சதுர மீற்றர் பரப்பளவில் கால்பந்து மற்றும் பல்வேறு விளையாட்டுகள்ரூபவ் 4 உள்ளக விளையாட்டு அனுபவங்கள் (கால்பந்து, உடற்பயிற்சி, சைக்கிளோட்டம் மற்றும் மலையேற்றம்) இலவச அணுகும் வசதியையும் வழங்குகின்றது. ஒரே குரையின் கீழ் ஐம்பதிற்கும் மேற்பட்ட விளையாட்டுகளுக்கான பயிற்சிகளும், 2500இற்கும் மேற்பட்ட உற்பத்திகளும் கொண்ட விளையாட்டு ஆர்வலர்கள் விரும்பி விஜயம் செய்யும் இடமாக உள்ளது. காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும் இந்த காட்சியறையில், சுமார் 100 வாகனங்களுக்கான தரிப்பிட வசதியும் உள்ளது.

Decathlonஇன் முதலாவது காட்சியறை திறப்பு குறித்து கருத்து தெரிவித்த Decathlon இலங்கையின் வதிவிடத் தலைவர் ஏட்டியன் மஃபாட் அவர்கள், ´உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு ஊடாக மக்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை முன்னெடுப்பதற்கு உதவுவதற்கு Decathlon அர்ப்பணிப்புடன் உள்ளது. எமது ஆர்வத்தினை எமது தொழிலாக மாற்றியமை குறித்து விளையாட்டு வீரர்களாக நாம் உள்ளோம். இதன் மூலம் பலருக்கு விளையாட்டுக்கான அணுகும் வசதியை வழங்கியிருக்கின்றோம். நான்கு தசாப்தங்களாக, உலகம் முழுவதிலும் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு Decathlon உதவி வழங்கியுள்ளது, வசதியளித்துள்ளது. பயிற்சி முறைகளை புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. எமது காட்சியறைகள் மற்றும் எமது தயாரிப்புகள் இரண்டிலும் புத்தாக்கத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றது. ஒவ்வொரு தயாரிப்பிற்குப் பின்னிலையிலும், ஒரு எண்ணம், ஒரு எதிர்பார்ப்பு, ஒரு உள்ளுணர்வு இருக்கின்றது. அதுவே, விளையாட்டு வீரரை ஊக்கப்படுத்தி, Decathlon அணியைச் சேர்ந்தவராக மாற்றுகின்றது. இலங்கையர்கள் மத்தியிலும் விளையாட்டுக்கான அதே உணர்வை நாம் காண்கின்றோம். விளையாட்டில் மேலும் ஆர்வத்துடன் ஈடுபடுவதற்கு Decathlon உற்சாகமளிக்கும் என நாம் நம்புகின்றோம். நகரத்தின் விளையாட்டுச் சூழலில் Decathlonஇனை ஒரு அங்கமாக மாற்றுவதற்கு நாம் ஆர்வத்துடன் இருக்கின்றோம். 45 நாடுகள், 1414 காட்சியறைகள் என்ற Decathlon வலையமைப்பில் இலங்கையையும் ஒன்றிணைப்பதில் நாம் மகிழ்வடைகின்றோம்´ என்றார்.

இலங்கையில் ஒரு தசாப்தத்திற்கும் மேற்பட்ட காலடித் தடத்தை Decathlon பதித்துள்ளது. தமது உற்பத்தி சாலைகளில் ஒன்றினை இலங்கையில் நடத்தி வருகின்றது. பத்து வருடங்களின் பின்னர்ரூபவ் 2018ஆம் ஆண்டில் 45 மில்லியன் உற்பத்திகளை Decathlon தயாரிக்கவுள்ளது. உற்பத்தி இசைவுத்தன்மை, தரம் மற்றும் சேவை என்பவற்றில் 80 இணை நிறுவனங்களை அதன் தொழிற்சாலை கொண்டிருக்கின்றது. இலங்கையில்ரூபவ் 18 தொழில்சாலைகளில், 15 விநியோகஸ்தர்களிடம் 20,000 ஊழியர்கள் Decathlon இற்காக பணியாற்றுகின்றனர். 2018ஆம் ஆண்டில் உலகளாவிய ரீதியில் 2600 கொள்கலன்களை நிறுவனம் ஏற்றுமதி செய்திருக்கின்றது.

காட்சியறைத் தலைவரான வட்சல் பான்ட் அவர்கள், ´இலங்கையில் விளையாட்டினை அனைவருக்கும் அணுகச் செல்வதற்கு உண்மையில் அர்ப்பணிப்புடன் உள்ள பல்வேறு விளையாட்டுக்களைச் சேர்ந்த 40 விளையாட்டு ஆர்வலர்களின் அணியினை Decathlon கொண்டிருக்கின்றது. இலங்கையர்களுடன் புன்னகையுடன் விளையாட்டில் ஈடுபடுவதனை இந்த அணியுடன் சேர்ந்து நாம் உறுதி செய்வோம்´ என்றார்.

சமூகத்திற்கு மீள வழங்கல் என்ற உறுதியுடன், பல்வேறு நிலைபேறு தன்மை முயற்சிகளில் உலகளாவிய ரீதியில் Decathlon ஈடுபட்டுள்ளது. இலங்கையில், இளம்பெண்களின் ஆற்றலை வெளிக்கொணர்வதற்கு நிறுவனம் இலக்கு வைத்திருக்கின்றது. Decathlon இன் உறுதிமொழி குறித்து கருத்து தெரிவித்த, தரன அறக்கட்டளையின் ஸ்தாபகர் சுரஞ்சனி விக்ரமரத்ன அவர்கள், ´சிறுவர் இல்லங்களில் உள்ள இளம் பெண்களுக்கு வினைத்திறன் மிக்க விளையாட்டு நிகழ்ச்சியின் ஊடாக தமது ஆற்றலை வளர்க்கவும், கட்டியெழுப்பவும் உதவுவதற்கு Decathlonஇன் பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிகழ்ச்சித் திட்டத்தில் இணைவதில் தரன அறக்கட்டளை மகிழ்ச்சி கொள்கின்றது. இந்த இளம் பெண்கள் முன்னேறுவதற்கும், தமது வாழ்க்கை இலட்சியங்களை அடைவதற்கும் இந்த உதவி துணை புரியும்´ என அவர் குறிப்பிட்டார்.

1976ம் ஆண்டு பிரான்ஸின் எங்லொஸ் நகரில் Decathlon ஸ்தாபிக்கப்பட்டது. 2017ஆம் ஆண்டு இறுதியில் 11பில்லியன் யூரோக்கள் வர்த்தக அளவினை பதிவு செய்திருந்தது. உலகின் மிகப்பாரிய விளையாட்டுப் பொருட்கள் விற்பனையாளராக அது திகழ்கின்றது.

Most Viewed